Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமெரிக்காவில் கொரோனா நிவாரணத்துக்காக ரூ.66 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்ய நாடாளுமன்றம் ஒப்புதல்

அமெரிக்காவில் கொரோனா நிவாரணத்துக்காக ரூ.66 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்ய நாடாளுமன்றம் ஒப்புதல்

By: Karunakaran Tue, 22 Dec 2020 08:16:09 AM

அமெரிக்காவில் கொரோனா நிவாரணத்துக்காக ரூ.66 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்ய நாடாளுமன்றம் ஒப்புதல்

உலகளவில் கொரோனா வைரஸ் காரணமாக மிகக்கடுமையாக அமெரிக்கா பாதிப்புக்குள்ளாகி வருகிறது. அமெரிக்காவில் இதுவரை 1 கோடியே 82 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 3 லட்சத்து 24 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவால், அமெரிக்காவில் சுமார் 1 கோடியே 20 லட்சம் பேர் வேலைவாய்ப்பினை இழந்துள்ளனர். இதனால், பல லட்சம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக கடந்த சில மாதங்களாக அமெரிக்காவின் வறுமை விகிதம் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. தற்போது சுமார் 80 லட்சம் அமெரிக்கர்கள் வறுமை நிலையில் உள்ளதாக புள்ளி விவர தகவல்கள் தெரிவிக்கின்றன.

parliament,66 lakh crore,corona relief,us ,நாடாளுமன்றம், 66 லட்சம் கோடி, கொரோனா நிவாரணம், யு.எஸ்

60 ஆண்டுகளுக்கு முன்பு வறுமை கண்காணிப்பு தொடங்கியதில் இருந்து ஒரே ஆண்டில் இவ்வளவு வறுமை அதிகரித்து இருப்பது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது. கொரோனாவால் வறுமை நிலைக்கு தள்ளப்பட்ட அமெரிக்கர்கள் தங்களின் வாழ்க்கையை நடத்த அரசின் நிவாரணத்தை எதிர்நோக்க வேண்டிய சூழல் உள்ளது. கடந்த ஜூன் மாதம் அமெரிக்க வரலாற்றிலேயே இல்லாத வகையில் 2 டிரில்லியன் அமெரிக்க டாலர் கொரோனா நிவாரண நிதிக்காக ஒதுக்கப்பட்டது.

இருப்பினும், அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு சற்றும் குறையாத நிலையில் பொருளாதார பாதிப்பும் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே வருகிறது. இதனால் கொரோனா நிவாரணத்துக்காக அமெரிக்க அரசு ஒதுக்கிய இந்த மிகப் பெரிய நிதி போதுமானதாக இல்லை. எனவே கொரோனா நிவாரணத்துக்காக 900 பில்லியன் அமெரிக்க டாலரை (இந்திய மதிப்பில் சுமார் ரூ.66 லட்சம் கோடி) ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டது. நீண்ட இடைவெளிக்கு பிறகு கொரோனா நிவாரணத்துக்காக 900 பில்லியன் அமெரிக்க டாலரை ஒதுக்கீடு செய்ய அமெரிக்க நாடாளுமன்றம் நேற்று ஒப்புதல் அளித்தது.


Tags :