Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வேளாண் சட்டங்களை திரும்ப பெற நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரை கூட்ட வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை

வேளாண் சட்டங்களை திரும்ப பெற நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரை கூட்ட வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை

By: Karunakaran Thu, 03 Dec 2020 10:40:08 AM

வேளாண் சட்டங்களை திரும்ப பெற நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரை கூட்ட வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை

மத்திய அரசு புதிதாக நிறைவேற்றிய 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி விவசாயிகள் தொடர் போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கவும், இந்த சட்டங்களை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தியும் பஞ்சாப், அரியானா உள்ளிட்ட வட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டு உள்ளனர். டெல்லிக்குள் நுழைந்த அவர்கள் நேற்று 7-வது நாளாக தங்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.

குறிப்பாக சிங்கு, திக்ரி உள்ளிட்ட முக்கியமான எல்லைகளை ஆக்கிரமித்து தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். நெடுஞ்சாலைகளிலும், சாலைக்கு அருகிலும் தொடர்ந்து நடத்தி வரும் இந்த போராட்டங்களால் டெல்லியில் இருந்து அரியானா, பஞ்சாப் மாநிலங்களுக்கான போக்குவரத்து இந்த சாலைகளில் தடைபட்டு இருக்கிறது. டெல்லியை உலுக்கி வரும் விவசாயிகளின் போராட்டத்தால் பல எல்லைகள் மூடப்பட்டு வருவதால் டெல்லியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது.

parliament,special session,agricultural laws,farmers ,பாராளுமன்றம், சிறப்பு அமர்வு, விவசாய சட்டங்கள், விவசாயிகள்

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இன்று மீண்டும் விவசாய பிரதிநிதிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்துகிறது. இதில் வேளாண் சட்டங்களில் உள்ள பிரச்சினைகள் குறித்து பேசப்படும் என தெரிகிறது. மத்திய அரசுடன் இன்று பேச்சுவார்த்தை நடக்க இருக்கும் நிலையில், இதில் பேச வேண்டிய கருத்துகள் குறித்து டெல்லி சங்கு எல்லை பகுதியில் நேற்று விவசாயிகள் ஆலோசனை நடத்தினர்.

பின்னர் விவசாய அமைப்பு ஒன்றின் தலைவர் தர்ஷன் பால் பேட்டி அளிக்கையில், விவசாய அமைப்புகளுக்கு இடையே பிரிவினையை உருவாக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. இந்த சட்டங்களை திரும்ப பெறுவதற்காகவும், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட அந்தஸ்து வழங்க வசதியாகவும் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் ஒன்றை மத்திய அரசு கூட்ட வேண்டும் என கூறினார். விவசாயிகளை அரசு தொடர்ந்து வஞ்சித்து வருவதாக கூறியுள்ள விவசாயிகள், தங்கள் கோரிக்கை நிறைவேறினால் மட்டுமே டெல்லியில் இருந்து திரும்புவோம் என கூறியுள்ளனர்.

Tags :