Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மத்திய நிர்வாக தீர்ப்பாயத்திற்கு பார்லிமென்ட் குழு அனுப்பியுள்ள கடிதம்

மத்திய நிர்வாக தீர்ப்பாயத்திற்கு பார்லிமென்ட் குழு அனுப்பியுள்ள கடிதம்

By: Nagaraj Mon, 03 Apr 2023 7:28:10 PM

மத்திய நிர்வாக தீர்ப்பாயத்திற்கு பார்லிமென்ட் குழு அனுப்பியுள்ள கடிதம்

புதுடெல்லி: மத்திய நிர்வாக தீர்ப்பாயம் (செயல்முறை) விதிகள், 1987ன் படி, ஒவ்வொரு விண்ணப்பமும் பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து ஆறு மாதங்களுக்குள் முடிந்தவரை விசாரிக்கப்பட்டு தீர்வு காணப்பட வேண்டும் என்பது விதி.

மத்திய நிர்வாக தீர்ப்பாயத்திற்கு (சிஏடி) பார்லிமென்ட் குழு அனுப்பியுள்ள கடிதத்தில், 1,350 வழக்குகள் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தீர்வு காணப்படாமல் நிலுவையில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதில், ஓய்வூதியம் மற்றும் மூத்த குடிமக்கள் தொடர்பான வழக்குகளை முன்னுரிமை அடிப்படையில் கையாள வேண்டும். இந்த தீர்ப்பாயத்தின் பல்வேறு அமர்வுகளில் 80,545 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

case,parliment,priority ,பார்லிமென்ட் குழு, முன்னுரிமை, வலியுறுத்தல்

மத்திய நிர்வாக தீர்ப்பாயம் (செயல்முறை) விதிகள், 1987ன் படி, ஒவ்வொரு விண்ணப்பமும் பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து ஆறு மாதங்களுக்குள் முடிந்தவரை விசாரிக்கப்பட்டு தீர்வு காணப்பட வேண்டும் என்பது விதி.

இருப்பினும், தீர்ப்பாயத்தின் சில அமர்வுகளில், உறுப்பினர்களின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை. அதேபோல், அமர்வுகளின் எண்ணிக்கையும் போதுமான அளவு அதிகரிக்கப்படவில்லை. நிலுவையில் உள்ள வழக்குகள் தீர்க்கப்படாமல் இருப்பதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்.

அலகாபாத், பெங்களூரு, ஹைதராபாத், ஜம்மு மற்றும் பாட்னா அமர்வுகள் அனுமதிக்கப்பட்ட பலத்தில் 50 சதவீதத்துடன் மட்டுமே செயல்படுகின்றன. இவ்வாறு நாடாளுமன்றக் குழு தெரிவித்துள்ளது.

Tags :
|