Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • செயலிழந்த ரஷிய செயற்கை கோள் ஒன்றின் பாகம் நாளை சீன ராக்கெட் மீது மோதக்கூடும் என கணிப்பு

செயலிழந்த ரஷிய செயற்கை கோள் ஒன்றின் பாகம் நாளை சீன ராக்கெட் மீது மோதக்கூடும் என கணிப்பு

By: Karunakaran Fri, 16 Oct 2020 12:57:51 PM

செயலிழந்த ரஷிய செயற்கை கோள் ஒன்றின் பாகம் நாளை சீன ராக்கெட் மீது மோதக்கூடும் என கணிப்பு

பூமியிலிருந்து ஏராளமான செயற்கை கோள்கள் விண்வெளிக்கு அனுப்பட்டுள்ளன. இவற்றில் பல செயலிழந்த நிலையில் விண்வெளியில் உள்ளன. பூமியின் விண்வெளியில் ஏராளமான செயலிழந்த செயற்கை கோள்கள், ராக்கெட் பாகங்கள் மிதக்கின்றன. இந்த விண்வெளி குப்பைகள், பூமியை வலம்வந்தபடியே இருக்கின்றன.

இந்நிலையில், விண்வெளி குப்பைகளாக வலம் வரும் செயலிழந்த ரஷிய செயற்கை கோள் ஒன்றின் பாகம், நாளை சீன ராக்கெட் மீது மோதக்கூடும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. பூமியின் கீழ்மட்ட சுற்றுவட்டப் பாதையில் 991 கிலோமீட்டர் உயரத்தில் இந்த விண்மோதல் நிகழலாம் என்று அமெரிக்க ஆய்வகமான லியோ லேப்ஸ் நிறுவனம் கூறி உள்ளது.

defunct russian satellite,collide,chinese rocket,space ,செயலிழந்த ரஷ்ய செயற்கைக்கோள், மோதல், சீன ராக்கெட், விண்வெளி

இந்த ரஷிய செயற்கை கோள் 1989-ல் விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. அது செயலிழந்த பின்பு குப்பையாக விண்ணில் சுற்றுகிறது. இந்த செயற்கை கோள் மீது, சீனாவால் 2009-ல் விண்வெளிக்கு அனுப்பப்பட்டு செயலிழந்த ஒரு ராக்கெட்டின் பாகம் நாளை மோதும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

இதற்கான வாய்ப்புகள் 10 சதவீதம் தான் என்றாலும், இந்த மோதல் நிகழ்ந்தால் அது பயங்கரமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்த மோதலினால் ஏற்படும் வேகம் விண்வெளியில் இருக்கும் மற்ற ராக்கெட் பாகங்கள் அல்லது செயற்கை கோள்களை பாதிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

Tags :