Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உத்தர பிரதேசத்தில் குற்றவாளிக்கு ஆதரவாக பேசிய பாஜக எம்எல்ஏவுக்கு கட்சி தலைமை எச்சரிக்கை

உத்தர பிரதேசத்தில் குற்றவாளிக்கு ஆதரவாக பேசிய பாஜக எம்எல்ஏவுக்கு கட்சி தலைமை எச்சரிக்கை

By: Karunakaran Mon, 19 Oct 2020 6:01:20 PM

உத்தர பிரதேசத்தில் குற்றவாளிக்கு ஆதரவாக பேசிய பாஜக எம்எல்ஏவுக்கு கட்சி தலைமை எச்சரிக்கை

உத்தர பிரதேச மாநிலம் பலியா மாவட்டத்தில் உள்ள துர்ஜான்பூரில் நியாயவிலைக் கடைகள் ஏலம் விடப்பட்டபோது ஏற்பட்ட மோதலில், பா.ஜ.க நிர்வாகியும் முன்னாள் ராணுவ வீரருமான தீரேந்தர் சிங், ஜெய் பிரகாஷ் என்பவர் மீது துப்பாக்கியால் சுட்டார். இதில் ஜெய் பிரகாஷ் உயிரிழந்தார். மாவட்ட துணை ஆட்சியர், காவல்துறை டி.எஸ்.பி ஆகியோர் முன்னிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்தது அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

இந்நிலையில், இந்த கொலை தொடர்பாக தேடப்பட்டு வந்த தீரேந்திர சிங் நேற்று கைது செய்யப்பட்டார். போலீஸ் விசாரணையை தவிர்க்கும் வகையில் சரண் அடைய விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், அவரை நெடுஞ்சாலையில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில், மோதலின்போது தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவே தீரேந்திர சிங் சுட்டதாக பா.ஜ.க எம்.எல்.ஏ. சுரேந்திர சிங் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

party leadership,bjp mla,culprit,uttar pradesh ,கட்சி தலைமை, பாஜக எம்எல்ஏ, குற்றவாளி, உத்தரபிரதேசம்

மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக பா.ஜ.க எம்.எல்.ஏ. சுரேந்திர சிங் குற்றம்சாட்டினார். இந்நிலையில் இது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி, அவருக்கு மாநில பாஜக நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மேலும் எம்எல்ஏவின் இந்த நடத்தை குறித்து பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவும் கடுமையாக எச்சரித்துள்ளார்.

மாநில பாஜக தலைவர் ஸ்வதந்திர தேவ் சிங்கை தொடர்பு கொண்டு பேசிய நட்டா, பாஜக எம்எல்ஏவின் செயலை கண்டித்து நோட்டீஸ் அனுப்பும்படி உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. மேலும், போலீஸ் விசாரணையில் எம்எல்ஏ தலையிட முயற்சி செய்தால் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்ததாக கூறப்படுகிறது.

Tags :