Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தொழில் நுட்ப கோளாறால் சூடானில் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானது

தொழில் நுட்ப கோளாறால் சூடானில் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானது

By: Nagaraj Mon, 24 July 2023 7:49:48 PM

தொழில் நுட்ப கோளாறால் சூடானில் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானது

கார்டூம்: சூடான் விமான நிலையத்தில் பயணிகள் விமானம் தரையிறங்கியது. திடீரென அது விபத்தில் சிக்கியது.

சூடானில் அக்டோபர் 25, 2021 அன்று அதிகாரத்தைக் கைப்பற்றிய ராணுவத்திற்கும் துணை ராணுவப் படைகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இதுவரை 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

எனினும், ராணுவத்துக்கும் துணை ராணுவத்துக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளது. இந்த நிலையில் போர் 100வது நாளை எட்டிய நிலையில் சூடான் விமான நிலையத்தில் பயணிகள் விமானம் தரையிறங்கியது. திடீரென அது விபத்தில் சிக்கியது.

accident,flight,malfunction,passenger,sudan,technical ,கோளாறு, சூடான், தொழில் நுட்பம், பயணிகள், விபத்து,

இதுபற்றி சூடான் ராணுவம் பேஸ்புக்கில் வெளியிட்ட ஒரு செய்தியில், ஆன்டனோவ் பயணிகள் விமானம் ஒன்று தொழில் நுட்ப கோளாறால் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் 4 ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர். ஒரு குழந்தை உயிர் தப்பியது என தெரிவித்து உள்ளது.

போர் 100-வது நாளை எட்டிய நிலையில், நேற்று தர்பர் பகுதியில் நடந்த ஏவுகணை தாக்குதலில் 16 பேர் உயிரிழந்தனர். இந்த போரால், ஆயிரக்கணக்கான குடிமக்கள் எல்லையை கடந்து வேறு பகுதிகளுக்கு தப்பி ஓடுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|