Advertisement

கோவை – சேலம் இடையிலான பயணிகள் சேவை ரத்து

By: vaithegi Tue, 02 May 2023 2:29:50 PM

கோவை – சேலம் இடையிலான பயணிகள் சேவை ரத்து

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள ரயில்வே வழித்தடங்களில் பராமரிப்பு பணிகள் நடந்து வருவதால் சில முக்கிய மாற்றங்களை தெற்கு ரயில்வே அறிவிப்பு .... தெற்கு ரயில்வே வாரியம் கோடைகாலத்தில் தான் முக்கிய பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் வழித்தடங்களில் செல்லும் ரயில்களை தாமதமாகவும் அல்லது பகுதியாக ரத்து செய்யப்படுவதாகவும் அல்லது முழுமையாக ரத்து செய்யப்படுவதாகவும் மாற்றங்களை அறிவித்து கொண்டு வருகிறது.

coimbatore,salem,rail ,கோவை , சேலம், ரயில்

ஆனால் கோடைவிடுமுறை தொடங்கியுள்ள நிலையில் அதிக அளவிலான மக்கள் ரயில்களில் பயணிக்கும் இச்சூழலில் தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பு மக்களை ஷாக் ஆக்கியுள்ளது.

அதாவது, வருகிற மே 16-ம் தேதி வரைக்கும் கோவை மற்றும் சேலம் இடையிலான மின்சார ரயில் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்ட்டு உள்ளது. அதேநேரம், பராமரிப்பு பணிகள் முடிந்த பின்னர் மீண்டும் கோவை – சேலம் இடையிலான ரயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|