Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஈரான் பயணிகள் விமானத்தின் அருகில் அமெரிக்க போர் விமானம் பறந்ததால் பயணிகள் காயம்

ஈரான் பயணிகள் விமானத்தின் அருகில் அமெரிக்க போர் விமானம் பறந்ததால் பயணிகள் காயம்

By: Karunakaran Fri, 24 July 2020 1:15:46 PM

ஈரான் பயணிகள் விமானத்தின் அருகில் அமெரிக்க போர் விமானம் பறந்ததால் பயணிகள் காயம்

ஈரான் நாட்டிலிருந்து ஈரான் நாட்டைச் சேர்ந்த விமானம் நேற்று துருக்கியில் உள்ள பெய்ரூட் விமான நிலையத்திற்கு பறந்து சென்று கொண்டிருந்தது. துருக்கி எல்லையில் அமெரிக்க விமானம் ஒன்று பயணிகள் விமானத்தை நோக்கி மிகவும் அருகில் வந்தது.

இதனை கண்ட விமானி நொடிப்பொழுதில் சுதாரித்து விமானத்தை உடனடியாக மேலே நோக்கி செலுத்தினார். இதனால் நடைபெறவிருந்த பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இருப்பினும் திடீரென செங்குத்தாக விமானம் மேலே உயர்ந்ததால் விமானிகள் ஏராளமானோர் காயம் அடைந்ததாக ஈரான் தெரிவித்துள்ளது.

us,warplane,iran,passenger plane ,அமெரிக்கா, போர் விமானம், ஈரான், பயணிகள் விமானம்

இதுகுறித்து அமெரிக்கா தரப்பில் கூறுகையில், அமெரிக்க விமானம் போதுமான இடைவெளி விட்டே பறந்தது என்று தெரிவித்துள்ளது. அணு ஆயுத பிரச்சனையில் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் நீண்டகாலமாக பிரச்சனை இருந்து வரும் நிலையில் இந்த சம்பவத்தால் அமெரிக்காவை ஈரான் குற்றம்சாட்டி வருகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன் ஈரானின் முக்கிய ராணுவ தளபதியை ஈராக் எல்லையில் அமெரிக்கா விமான தாக்குதல் நடத்தி கொன்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்தால் இருநாடுகள் இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது.

Tags :
|
|