Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • காய்ச்சல் மருந்துகளுடன் பயணிக்கும் பயணிகள்... சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

காய்ச்சல் மருந்துகளுடன் பயணிக்கும் பயணிகள்... சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

By: Nagaraj Sat, 31 Dec 2022 9:59:45 PM

காய்ச்சல் மருந்துகளுடன் பயணிக்கும் பயணிகள்... சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

கோவை: காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிலர் காய்ச்சல் மருந்துகளுடன் பயணிப்பதாகவும், விமான நிலைய வளாகத்தில் பரிசோதனை செய்வதைத் தவிர்க்க முயற்சிப்பதாகவும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.


பல்வேறு நாடுகளின் விமான நிலையங்களில் இருந்து வரும் பயணிகளை பரிசோதனை செய்ய மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. கோவை விமான நிலையத்திலும் சோதனை மையம் திறக்கப்பட்டு வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு பரிசோதனை நடத்தப்படுகிறது. தானியங்கி தெர்மோகிராபி இயந்திரம் உட்பட பல்வேறு உபகரண சோதனைகள் பயன்படுத்தப்படுகின்றன.

காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிலர் காய்ச்சல் மருந்துகளுடன் பயணிப்பதாகவும், விமான நிலைய வளாகத்தில் பரிசோதனை செய்வதைத் தவிர்க்க முயற்சிப்பதாகவும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து, சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

கொரோனா தொற்று பரவல் தொடர்பான தடுப்பு நடவடிக்கைகளில் உடல் வெப்பநிலை பரிசோதனை முக்கியமாகக் கருதப்படுகிறது. இது தவிர, சளி, இருமல் உள்ளிட்ட பிற அறிகுறிகளையும் கண்காணிக்க அறிவுறுத்தப்படுகிறது.

fever,medicine,travel, ,
காய்ச்சல், பயணம், மருந்து, நோய் தடுப்பு, பொறுப்பு, ஒத்துழைப்பு

தற்போது, வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளில் 2 சதவீதம் பேருக்கு மட்டுமே பரிசோதனை செய்யப்படுகிறது. சில பயணிகள் தங்கள் காய்ச்சல் அறிகுறிகளை மறைக்க காய்ச்சல் மருந்துகளுடன் பயணம் செய்கிறார்கள். சோதனைகளில் இருந்து எப்படியாவது தப்பிக்க வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம்.

ஆனால் வீட்டிற்கு சென்ற பின் உடல்நிலை மோசமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். இதனால், பரிசோதனை செய்யாமல் வெளியேறுபவர்கள் சமூகத்தில் நோய் பரவுவதற்கு முக்கிய காரணமாகி விடுகின்றனர். எனவே, வெளிநாடுகளில் இருந்து வரும் ஒவ்வொரு பயணிகளும் தங்களது பொறுப்பை உணர்ந்து நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் என தெரிவித்தனர்.

Tags :
|
|