Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மன்னர் சார்லஸ் பெயரில் பாஸ்போர்ட்டுகள் வெளியிடப்பட்டுள்ளது

மன்னர் சார்லஸ் பெயரில் பாஸ்போர்ட்டுகள் வெளியிடப்பட்டுள்ளது

By: Nagaraj Thu, 20 July 2023 9:23:13 PM

மன்னர் சார்லஸ் பெயரில் பாஸ்போர்ட்டுகள் வெளியிடப்பட்டுள்ளது

லண்டன்: ‘அவரது மாட்சிமை’ என்ற பட்டத்துடன் மன்னர் 3-ம் சார்லசின் பெயரை தாங்கி புதிய பாஸ்போர்ட்டுகள் வெளியிடப்பட்டுள்ளன.

இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத் மறைவை தொடர்ந்து, அவரது மகன் சார்லஸ் மன்னராக முடி சூட்டப்பட்டார். அவர் 3-ம் சார்லஸ் என அழைக்கப்படுகிறார். இதனிடையே சார்லஸ் மன்னரானதை தொடர்ந்து, அந்த நாட்டின் தேசிய கீதம், நாணயம், பாஸ்போர்ட்டு உள்ளிட்டவற்றை மன்னரை முன்னிறுத்தி மாற்றங்கள் செய்யப்பட்டன.

charles,england,king,name,passports,release ,இங்கிலாந்து, சார்லஸ், பாஸ்போர்ட்டுகள், பெயர், மன்னர், வெளியீடு

அந்த வகையில் இங்கிலாந்தில் இதுவரை ‘அவளது மாட்சிமை’ என்ற பட்டத்துடன் ராணி 2-ம் எலிசபெத் பெயரை தாங்கி பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்டு வந்தன. தற்போது அதில் மாற்றம் செய்யப்பட்டு ‘அவரது மாட்சிமை’ என்ற பட்டத்துடன் மன்னர் 3-ம் சார்லசின் பெயரை தாங்கி புதிய பாஸ்போர்ட்டுகள் வெளியிடப்பட்டுள்ளன.

புதிய வடிவமைப்புடன் தயாரான பாஸ்போர்ட்டுகளை அந்த நாட்டின் உள்துறை மந்திரி சுயெல்லா பிரேவர்மேன் வெளியிட்டார். இங்கிலாந்தில் 70 ஆண்டுகளுக்கு பிறகு பாஸ்போர்ட்டில் மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|