Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மதுரை அரசு மருத்துவமனையில் பே வார்டுகள் இன்று முதல் தொடக்கம்

மதுரை அரசு மருத்துவமனையில் பே வார்டுகள் இன்று முதல் தொடக்கம்

By: Nagaraj Thu, 02 Mar 2023 10:30:29 PM

மதுரை அரசு மருத்துவமனையில் பே வார்டுகள் இன்று முதல் தொடக்கம்

மதுரை: பே வார்டுகள் தொடக்கம்... மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நோயாளிகள் கட்டண அடிப்படையில் சிகிச்சைப் பெறும் வகையில் பே வார்டுகள் இன்று முதல் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் முக்கியமான மருத்துவமனையாக பார்க்கப்படுவது மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை தான். தென் தமிழகத்திலேயே முதல் முறையாக தனியார் மருத்துவமனைகளை போல ராஜாஜி மருத்துவமனையிலும் பே வார்டுகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

சென்னை அரசு மருத்துவமனைகளுக்கு இணையாக பார்க்கப்படும் இந்த மதுரை ராஜாஜி அரசு மருத்துமனையில் தனியார் மருத்துவமனைகளுக்கு நிகரான சிகிச்சை வழங்கப்படவும், அதற்கு அனைத்து தரப்பு மக்களையும் வரவைக்கும் வகையில் கட்டண அடிப்படையில் சிகிச்சை அளிக்க முடிவு செய்து, அதிநவீன வசதிகளுடன் கூடிய பே-வார்டு என்றழைக்கப்படும் கட்டண வார்டு இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண வார்டை மக்கள் நல்வாழ்துறை அமைச்சர் மா .சுப்பிரமணியன் இன்று மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு நேரில் சென்று திறந்து வைத்தார்.

hospital,extension,fee,pay ward,minister ,மருத்துவமனை, விரிவாக்கம், கட்டணம், பே வார்டு, அமைச்சர்

சுமார் 87 லட்சம் மதிப்பில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி பிளாக் கட்டிடத்தில் 8 பே-வார்டுகள், அண்ணா பேருந்து நிலையம் அருகே உள்ள விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு கட்டிடத்தில் 8 பே-வார்டுகள் என மொத்தம் 16 வார்டுகள் முதற்கட்டமாக திறக்கப்பட்டுள்ளது.

இந்த வார்டுகளில் தனி கழிவறை, டி.வி., கட்டில்கள், மெத்தை போன்ற அனைத்து வசதிகளும் தனியார் மருத்துவமனைக்கு நிகராக உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கட்டண வார்டுகள் அனைத்திலும் குளிரூட்டப்பட்ட அதாவது ஏசி வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும் ராஜாஜி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள பே-வார்டுகளில் டீலக்ஸ் மற்றும் சிங்கிள் அறைகளுக்கு 2 ஆயிரம் முதல் 1,500 வரை கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுபோல், 2-ம் கட்டமாக, பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் குறிப்பாக மகப்பேறு பிரிவு துறையிலும் இந்த வசதிகளை விரிவாக்கம் செய்ய முடிவு செய்து மேலும் 8 பே-வார்டுகள் அமைக்கப்பட உள்ளது .

Tags :
|