Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இனி UPI மூலமாக பணம் செலுத்தினால் கட்டணம் வசூலிக்கப்படும்

இனி UPI மூலமாக பணம் செலுத்தினால் கட்டணம் வசூலிக்கப்படும்

By: vaithegi Wed, 29 Mar 2023 12:00:07 PM

இனி UPI மூலமாக பணம் செலுத்தினால் கட்டணம் வசூலிக்கப்படும்


இந்தியா: தற்போது UPI மூலமாக Google pay, Amazon pay, Paytm உள்ளிட்டவை பயன்படுத்தி மற்றவர்களுக்கு சுலபமாக பணப்பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வசதியினை தற்போது பெரும்பாலானோர் பயன்படுத்தி கொண்டு வருகின்றனர்.

எனவே அதன்படி ஒவ்வொரு நாளும் இதனை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதுடன், பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் UPI மூலமாக மேற்கொள்ளப்படும் பணப்பரிவர்த்தனைகளுக்கு ஏப்ரல் 1-ம் தேதி முதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

இதையடுத்து இது தொடர்பாக நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், வருகிற ஏப்ரல் 1-ம் தேதி முதல் யுபிஐ மூலமாக வணிக பயன்பாடுகளுக்காக மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளுக்கு ப்ரீபெய்டு பேமென்ட் இன்ஸ்ட்ருமென்ட் கட்டணங்களை பயன்படுத்துமாறு தெரிவித்துள்ளது.

payment,upi,cash ,கட்டணம் ,UPI ,பணம்

அதன்படி வருகிற ஏப்ரல் 1 முதல் ரூ.2000க்கு மேல் வணிக பரிவர்த்தனைகள் மேற்கொண்டால் கட்டணம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தொலைதொடர்பு, அஞ்சல் கல்வி விவசாயம் ஆகியவற்றிற்கு 0.7% கட்டணமும், பல்பொருள் அங்காடிக்கு 0.9% கட்டணமும், அரசு,காப்பீடு, ரயில்வே, மியூச்சுவல் ஃபண்ட் ஆகியவற்றிற்கு 1 சதவீத கட்டணமும், இதேபோல எரிபொருளுக்கு 0.5% கட்டணமும் வசூலிக்க NPCI-ஐ பரிந்துரை செய்துள்ளது.

Tags :
|