Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பாடசாலைக்கு குழந்தைகளை அனுப்பினால் பெற்றோருக்கு பணம் வழங்கல்

பாடசாலைக்கு குழந்தைகளை அனுப்பினால் பெற்றோருக்கு பணம் வழங்கல்

By: Nagaraj Sat, 22 Oct 2022 9:21:12 PM

பாடசாலைக்கு குழந்தைகளை அனுப்பினால் பெற்றோருக்கு பணம் வழங்கல்

கனடா: பாடசாலைக்கு அனுப்பினால் பணம்... கனடாவின் ஒன்றாரியோ மாகாண அரசாங்கம் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதற்கு பெற்றோருக்கு பணம் கொடுப்பதாக அறிவித்துள்ளது

இரண்டு ஆண்டுகளாக பாடசாலைகள் கிரமமான முறையில் நடைபெறாத நிலையில் ஒவ்வொரு பிள்ளைக்கும் 200 முதல் 250 டொலர்கள் வரையில் கொடுப்பனவு வழங்கப்பட உள்ளது என மாகாண கல்வி அமைச்சர் ஸ்டீபன் லீஸ் தெரிவித்துள்ளார்.

பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதற்கு ஏற்படும் செலவுகளை ஈடு செய்யும் வகையில் இவ்வாறு மாகாண அரசாங்கம் ஒரு தொகை கொடுப்பனவை வழங்குகின்றது. 18 வயதிற்கும் குறைந்த பாடசாலை செல்லும் பிள்ளைகள் அது பெற்றோருக்கு தலா ஒவ்வொரு பிள்ளைக்கும் 200 டாலர்களும் விசேட தேவையுடைய பிள்ளைகளுக்கு தலா 250 டாலர்களும் வழங்கப்படுகின்றது.

province,canada,schools,children,parents,allowance ,
மாகாணம், கனடா, பாடசாலைகள், குழந்தைகள், பெற்றோர், கொடுப்பனவு

எவ்வித இடையூறும் இன்றி பாடசாலை பிள்ளைகள் பாடசாலைக்கு சமூகம் அளிப்பதனை உறுதி செய்ய வேண்டும் எனவும் அதுவே தமது தெளிவான திட்டம் எனவும் மகன கல்வி அமைச்சர் ஸ்டீபன் லீஸ் தெரிவித்துள்ளார்.

கோவிட் பெருந்தொற்று காரணமாக பாடசாலை கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டமையை ஈடு செய்யும் நோக்கில் இவ்வாறு அரசாங்கம் பெற்றோருக்கு ஊக்கத் தொகையை வழங்குகிறது. இந்த கொடுப்பனவிற்காக 365 மில்லியன் டாலர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டிலும் மாகாண அரசாங்கம் இவ்வாறான ஒரு கொடுப்பனவுத் தொகையை வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது

Tags :
|