Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஐக்கிய அரபு அமீரகம் - இஸ்ரேல் - பஹ்ரைன் ஆகிய நாடுகளுக்கு இடையே அமைதி ஒப்பந்தம்

ஐக்கிய அரபு அமீரகம் - இஸ்ரேல் - பஹ்ரைன் ஆகிய நாடுகளுக்கு இடையே அமைதி ஒப்பந்தம்

By: Karunakaran Wed, 16 Sept 2020 09:40:06 AM

ஐக்கிய அரபு அமீரகம் - இஸ்ரேல் - பஹ்ரைன் ஆகிய நாடுகளுக்கு இடையே அமைதி ஒப்பந்தம்

1948 ஆம் ஆண்டு இஸ்ரேல் தனி நாடாக அறிவிக்கப்பட்டதற்கு மத்திய கிழக்கு பகுதியில் உள்ள அரபு நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அதன்பின், எகிப்து,ஜெர்டான்,லெபனான்,ஈராக், சிரியா, பாலஸ்தீனமும் இஸ்ரேலுக்கு எதிராக போரில் ஈடுபட்டன. இதில் இஸ்ரேல் வெற்றி பெற்றது. இருப்பினும் இஸ்ரேல் உடனான மோதல் போக்கு அதிகரித்து வந்தது. இஸ்ரேலை ஒரு தனி நாடாக அரபு நாடுகள் ஏற்றுக்கொள்ளவில்லை.

1979 ஆம் ஆண்டு எகிப்தும், 1994 ஆம் ஆண்டு ஜோர்டானும் இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தம் செய்து கொண்டன. இஸ்ரேல்-ஐக்கிய அரபு அமீரகம் இடையே பொருளாதாரம், ராஜாங்கம், தூதரகம் உள்பட எந்த வித உறவுகளும் இல்லாமல் இருந்தது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் முயற்சியால் இரு நாடுகளும் இடையேயும் அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ள சம்மதம் தெரிவிக்கப்பட்டது.

peace accord,united arab emirates,israel,bahrain,trump ,அமைதி ஒப்பந்தம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இஸ்ரேல், பஹ்ரைன், டிரம்ப்

ஜோர்டான், எகிப்து ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தம் மேற்கொண்ட அரபு நாடு என்ற பட்டியலில் அமீரகம் இணைந்துள்ளது. வளைகுடா நாடுகளில் இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தம் மேற்கொண்ட முதல் நாடு அமீரகம் தான். அதன்பின், இரு நாடுகளுக்கு இடையேயும் நேரடி விமான போக்குவரத்து தொடங்கப்பட்டது. இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகம் - இஸ்ரேல் - பஹ்ரைன் ஆகிய நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள அமைதி உடன்படிக்கை நேற்று அமெரிக்காவில் கையெழுத்தானது.

ஆபிரகாம் உடன்படிக்கை என பெயரிடப்பட்டுள்ள இந்த அமைதி ஒப்பந்தத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்னிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஐக்கிய அரபு அமீரகத்தின் இளவரசரும், வெளியுறவுத்துறை மந்திரியுமான ஷேக் முகமது பின் ஜாயித் அல் நஹ்யான் மற்றும் அப்துல்லாதீப் அல் சயானி ஆகியோர் கூட்டாக கையெழுத்திட்டனர். இதனால் இஸ்ரேலுடன் அமைதி உடன்படிக்கை செய்துகொண்டுள்ள அரபு நாடுகளின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.

Tags :
|