Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமைதியான முறையில் இலங்கையில் பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு

அமைதியான முறையில் இலங்கையில் பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு

By: Nagaraj Wed, 05 Aug 2020 8:36:14 PM

அமைதியான முறையில் இலங்கையில் பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு

இலங்கையில் இன்று நாடாளுமன்ற பொதுத் தேர்தல் வாக்குப்பதிவு நடந்து வருகிறது. இதில் நாடு முழுவதும் மதியம் வரையான காலப்பகுதியில் 50 வீதமான வாக்குப்பதிவுகள் இடம்பெற்றுள்ள நிலையில் மாவட்ட ரீதியான வாக்குப்பதிவு விகிதம் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அந்தவகையில் கொழும்பு - 57% களுத்துறை - 60% மாத்தறை - 60% புத்தளம் - 52% காலி - 55% குருநாகல்- 55% யாழ்ப்பாணம்- 53% முல்லைத்தீவு - 62% ஹம்பாந்தோட்டை - 60% வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளது.

அத்தோடு கிளிநொச்சி - 57% கேகாலை - 47% திருகோணமலை - 50%, கண்டி - 40% மொனராகலை - 35% இரத்தினபுரி - 67% பதுளை - 50% அம்பாரா - 55% பொலன்னறுவை - 55% வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது.

மேலும் கம்பஹா - 53% மாத்தளை - 62% நுவரெலியா - 70% மன்னார் - 62% அனுராதாபுரம் - 50% மட்டக்களப்பு - 55% வவுனியா - 56% வாக்குப்பதிவுகள் இடம்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

voting,batticaloa,vavuniya,election commission ,வாக்குப்பதிவு, மட்டக்களப்பு, வவுனியா, தேர்தல்கள் ஆணைக்குழு

இதற்கிடையில் மஹியங்கனை- தம்பான பழங்குடியினரின் தலைவர் விஸ்வ கீர்த்தி வனஸ்பதி உருவரிகே வன்னிலா அத்தான் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றியுள்ளார். தம்பான கனிஷ்ட வித்தியாலயத்திலுள்ள வாக்களிப்பு நிலையத்துக்கு தனது மனைவி மற்றும் தனது இன மக்களுடன் இன்று (புதன்கிழமை) காலை சென்று வாக்களித்துள்ளார்.

அவருடன் சென்ற அனைவரும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி மிகவும் அமைதியான முறையில் வாக்களித்து, தங்களது ஜனநாயக கடமைகளை நிறைவேற்றியுள்ளனர். மஹியங்கனை தொகுதியில் 105,150 பேர் வாக்களிக்க தகுதி பெற்றள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags :
|