Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சிறு, குறு நடுத்தர நிறுவனங்களுக்கான ‘பீக் ஹவர்’ மின் கட்டணம் குறைக்கப்படுமாம்

சிறு, குறு நடுத்தர நிறுவனங்களுக்கான ‘பீக் ஹவர்’ மின் கட்டணம் குறைக்கப்படுமாம்

By: vaithegi Sat, 11 Nov 2023 5:06:20 PM

சிறு, குறு நடுத்தர நிறுவனங்களுக்கான ‘பீக் ஹவர்’ மின் கட்டணம் குறைக்கப்படுமாம்

சென்னை: மின் கட்டணம் 20 % குறைவு .. தமிழகத்தில் மின் கட்டண உயர்வால் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். ‘பீக் ஹவர்’ என்று சொல்லக்கூடிய உச்சபட்ச மின் பயன்பாட்டு நேரத்திற்கான கட்டணம் சுமார் 20 % வரை அதிகரிக்கப்பட்டது.

எனவே இதனை கண்டித்து தொழில் நிறுவனங்கள் அண்மைக்காலமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த வாரம் ஜவுளி உற்பத்தி ஊழியர்கள் மின் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

electricity bill,small and medium enterprises,employees ,மின் கட்டணம்,சிறு, குறு நடுத்தர நிறுவனங்கள் ,ஊழியர்கள்


இதன் காரணமாக பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. இந்நிலையில் சிறு, குறு நடுத்தர நிறுவனங்களுக்கான ‘பீக் ஹவர்’ மின் கட்டணத்தை அரசு குறைப்பதாக அறிவித்து உள்ளது.

அதாவது பீக் ஹவர் நேரத்திற்கான மின் கட்டணம் மின் பயன்பாட்டை பொறுத்து 10 – 25 சதவீதம் வரை குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :