Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பொய் சொல்லி அவசர நிதியுதவி கோருவோர் அபராதம்; கனடா அரசாங்கம் எச்சரிக்கை

பொய் சொல்லி அவசர நிதியுதவி கோருவோர் அபராதம்; கனடா அரசாங்கம் எச்சரிக்கை

By: Nagaraj Fri, 12 June 2020 6:06:20 PM

பொய் சொல்லி அவசர நிதியுதவி கோருவோர் அபராதம்; கனடா அரசாங்கம் எச்சரிக்கை

அபராதம் விதிக்கப்படும்... தங்களுக்கு கொரோனா இருப்பதாக பொய் சொல்லி கொரோனா அவசர நிதியுதவி கோருவோர், 5,000 டொலர்கள் வரை அபராதம் செலுத்த வேண்டிவரும் என கனடா அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது விரைவில் சட்டமாக்கப்பட உள்ளது. போலியான ஒரு கோரிக்கை, சரியான வருவாயை தெரிவிக்க தவறுதல், தனக்கு நிதியுதவி கோர தகுதி இல்லை என்று தெரிந்தும் உதவி பெறுதல், உண்மைகளை மறைத்தல் ஆகிய அனைத்தும் அந்த சட்டத்தின் கீழ் குற்றமாகும்.


sponsorship,imprisonment,fines,corona ,நிதியுதவி, சிறைதண்டனை, அபராதம், கொரோனா

இந்த குற்றங்களுக்கு தண்டனையாக 5,000 டொலர்கள் அபராதம், ஏமாற்றி பெறப்பட்ட தொகையை விட இருமடங்கு திருப்பிக் கொடுத்தல் ஆகியவை விதிக்கப்பட உள்ளன.

அல்லது 5,000 டொலர்கள் அபராதத்துடன் ஆறு மாதங்கள் சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம். வேலை செய்ய மறுத்து, தொடர்ந்து நிதியுதவி பெறுதலுக்கும் அபராதம் உண்டு. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|