Advertisement

பயணிகளை விட்டுச் சென்ற விமான நிறுவனத்திற்கு அபராதம்

By: Nagaraj Sat, 28 Jan 2023 9:55:57 PM

பயணிகளை விட்டுச் சென்ற விமான நிறுவனத்திற்கு அபராதம்

புதுடெல்லி: அபராதம் விதிப்பு... பெங்களூரு செல்லும் டெல்லி பயணிகளை விமான நிலையத்தில் விட்டு சென்ற கோ ஃபஸ்ட் விமான நிறுவனத்திற்கு சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் ரூ.10 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து டெல்லிக்கு கடந்த 9ம் தேதி புறப்பட்ட கோ ஃபஸ்ட் விமானம் விமான நிலையத்தின் டார்மாக்கில் 55 பயணிகளை ஏற்றிச் சென்றது.

விமானம் புறப்பட்ட பிறகு, பயணிகள் சமூக ஊடகங்களில் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர். இது தொடர்பாக விமான போக்குவரத்து இயக்குனரகம் அந்நிறுவனத்துக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

go first flight,penalty,rupees ten lakhs, ,அபராதம், கோ ஃபஸ்ட் விமானம், ரூபாய் பத்து லட்சம்

இந்த வழக்கில், நிறுவனத்துக்கு நேற்று ரூபாய்10 லட்சம் அபராதம் விதித்துள்ளதது. இதுகுறித்து சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் கூறியதாவது:கோ ஃபஸ்ட் இன் பதில், பயணிகளை ஏற்றிச் செல்வதில் நிறுவனம் எவ்வளவு அலட்சியமாக இருந்தது என்பதைக் காட்டுகிறது.

பயணிகளை ஏற்றிச் செல்வதிலும், பயணிகளின் சாமான்களை நிர்வகிப்பதிலும் கோ ஃபர்ஸ்ட் நிறுவனம் போதிய ஏற்பாடுகளைச் செய்யவில்லை. இந்த விதிமீறல் காரணமாக ரூ. 10 லட்சம் நிறுவனம் மீது விதிக்கப்பட்டுள்ளது

Tags :