Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • டெங்கு உறுதி செய்யப்பட்ட நோயாளிகளின் விவரங்களைத் தெரிவிக்காத மருத்துவர்களுக்கு அபராதம்

டெங்கு உறுதி செய்யப்பட்ட நோயாளிகளின் விவரங்களைத் தெரிவிக்காத மருத்துவர்களுக்கு அபராதம்

By: vaithegi Sat, 23 Sept 2023 10:04:29 AM

டெங்கு உறுதி செய்யப்பட்ட நோயாளிகளின் விவரங்களைத் தெரிவிக்காத மருத்துவர்களுக்கு  அபராதம்

சென்னை: தமிழ்நாடு முழுவதும் மழைப் பொழிவு உயர்ந்து வருவதால், கொசுக்கள், வைரஸ்கள், பாக்டீரியாக்கள் மூலம் பரவும் பல்வேறு தொற்றுகள் அதிகரித்து கொண்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக குழந்தைகளும், முதியவர்களும் அத்தகைய நோய்களுக்கு அதிக எண்ணிககையில் ஆளாகின்றனர். காய்ச்சல், உடல் வலி, தொண்டை வலி, சளி, இருமல், மூச்சுத் திணறல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் சிகிச்சைக்காக பலர் அனுமதிக்கப்படுகின்றனர்.

இதையடுத்து நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் நல்வாழ்வுத் துறை மிகவும் தீவிரப்படுத்தியுள்ளது. மற்றொருபுறம், சிகிச்சை கட்டமைப்புகளை விரிவுபடுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்ட நோயாளிகளின் விவரங்களைத் தெரிவிக்காத மருத்துவர்களுக்கு சட்ட விதிகளின்படி அபராதம் விதிப்பதற்கான அறிவிப்பை பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் செல்வவிநாயகம் வெளியிட்டுள்ளார்.

penalty,dengue,patient ,அபராதம்,டெங்கு ,நோயாளி

இதனை அடுத்து அதில் , மழைப் பொழிவு காரணமாக தமிழகம் முழுவதும் காய்ச்சல் பாதிப்புளும், குறிப்பாக டெங்கு காய்ச்சலும் அதிகமாக பதிவாகிகொண்டு வருகிறது. ஏடிஸ் வகை கொசுக்களால் பரவும் டெங்கு காய்ச்சல் தமிழக பொது சுகாதார விதிகளின்படி அறிவிக்கை செய்யப்பட்ட நோயாகவுள்ளது.

எனவே, அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள், தங்களிடம் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டால் அது பற்றி சம்பந்தப்பட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிடில் அவர்களுக்கு உரிய விதிகளின் படி அபராதம் விதிக்கப்படும். அதேபோல கொசு உற்பத்திக்கு வழிவகுக்கும் வகையில் செயல்படும் பொது மக்கள், நிறுவனங்கள், நில உரிமையாளர்கள், கடைகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் விதி மீறலின் தன்மையைப் பொருத்து அவர்களுக்கு ரூ.500 வரை ஒவ்வொரு முறையும் அபராதம் விதிக்கப்படும் என உத்தரவிட்டுள்ளார்.

Tags :
|