Advertisement

ரேசன் கடைகளில் பொருட்களை பதுக்கினால் அபராதம்

By: Nagaraj Sun, 27 Sept 2020 5:40:17 PM

ரேசன் கடைகளில் பொருட்களை பதுக்கினால் அபராதம்

பொருட்கள் பதுக்கினால் அபராதம்... தமிழக ரேசன் கடைகளில் பொருட்களை பதுக்கி வைத்தல் அல்லது அதிகமான ஸ்டாக் வைத்திருந்தால் கடை பணியாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ரேசன்கடைகளில் ஸ்மார்ட்கார்டு மூலமாக ரேசன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. பொருட்களின் இருப்பு, விநியோகம் ஆகியவற்றை மக்களும் அறிந்து கொள்ளும்படி இதற்கான செயலிகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் நவீன தொழில்நுட்பங்களை மேம்படுத்தியும் ரேசன் அங்காடிகளில் பொருட்கள் பதுக்கப்படுவது தொடர்வதாக புகார்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது:

government account,penalty,ration store,stock,warning ,அரசு கணக்கு, அபராதம், ரேசன் கடை, ஸ்டாக், எச்சரிக்கை

'ரேஷன் பொருட்களின் விற்பனை இயந்திரத்தையும், உண்மை இருப்பையும் சரிபார்க்கும்போது கூடுதல் இருப்பு காணப்பட்டால் பொருள் விநியோகத்தின் போது எடையை குறைத்து விநியோகித்ததாகவும், ரேசன் அட்டைதாரருக்கு தெரியாமல் போலி பட்டியல் தயாரித்ததாகவும் கணக்கில் கொள்ளப்படும்.

இதனால் இது குற்ற செயலாக கருதப்பட்டு சம்பந்தப்பட்ட ரேசன் கடை பணியாளர்களிடம் இருந்து அபராதம் வசூலிக்கப்படும். அபராத தொகையை வட்டம் அல்லது மண்டல அலுவலர் வசூலித்து அரசு கணக்கில் செலுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Tags :
|