Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல மக்கள் வெகு ஆர்வம்

சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல மக்கள் வெகு ஆர்வம்

By: Nagaraj Sat, 05 Sept 2020 09:26:27 AM

சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல மக்கள் வெகு ஆர்வம்

அரசுப் பேருந்துகளுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று முதல் தொடங்கியது. இதனால் சொந்த ஊர்களுக்கு செல்ல மக்கள் வெகு ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கொரோனா பொதுமுடக்க தளர்வுகள் அடிப்படையில் போக்குவரத்து தொடங்கியது. எனினும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் பேருந்துகள் நாளை மறுநாள் முதல் இயக்கப்படுகிறது.

இந்நிலையில் வெளியூர்களுக்கு செல்வதற்கான பேருந்து முன்பதிவு இன்று தொடங்கியது. குறிப்பாக சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு செல்ல ஏராளமான பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

officers,corona,outback,bus station ,
அதிகாரிகள், கொரோனா, வெளியூர்கள், பேருந்து நிலையம்

இதையடுத்து அரசுப் பேருந்துகளுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று முதல் தொடங்கியது. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஒரு சில நபர்கள் வந்து டிக்கெட் வாங்கிச் செல்கின்றனர். பெரும்பாலான மக்கள் ஆன்லைன் மூலம் புக்கிங் செய்துள்ளனர்.

குறிப்பாக சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளில் அதிக அளவு டிக்கெட் முன் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஐந்து மாதங்களாக சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் சென்னையில் தவித்து வந்த நடுத்தர வர்க்கத்தினர் பலரும் தற்போது போக்குவரத்து தொடங்குவதால் ஊருக்குச் செல்ல திட்டமிட்டுள்ளனர். எனவே வரும் 7-ஆம் தேதி முதல் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் அங்கு சமூக இடைவெளி உள்ளிட்ட கொரோனா நெறிமுறைகள் மக்கள் கடைபிடிப்பதை உறுதி செய்யும் வகையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கண்காணிப்பு பணியில் இப்போதே ஈடுபட்டு வருகின்றனர்.

Tags :
|