Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தை மீட்க மக்கள் தயாராகி விட்டார்கள் - மு.க.ஸ்டாலின்

தமிழகத்தை மீட்க மக்கள் தயாராகி விட்டார்கள் - மு.க.ஸ்டாலின்

By: Karunakaran Wed, 16 Dec 2020 08:46:19 AM

தமிழகத்தை மீட்க மக்கள் தயாராகி விட்டார்கள் - மு.க.ஸ்டாலின்

தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை சைதாப்பேட்டையில், சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நடைபெற்ற, மறைந்த கட்சி நிர்வாகிகள் நாகை முருகேசன், மேரி லூர்துசாமி, மடுவை அ.துரை, கே.எஸ்.ரூஸோ ஆகியோரின் உருவப்படங்கள் திறப்பு நிகழ்ச்சியில் காணொலிக்காட்சி மூலம் கலந்துகொண்டு, உருவப்படங்களை திறந்துவைத்து அஞ்சலி செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில், மு.க.ஸ்டாலின் பேசியபோது, இன்றைக்கு நாடே விவசாயிகளுக்கு ஆதரவாகப் போராடிக் கொண்டிருக்கிறது. டிராக்டர்களுடன் விவசாயிகள் டெல்லியில் குவிந்து வருகிறார்கள். தமிழ்நாட்டிலேயே டிராக்டர்களுடன் மறியலில் ஈடுபட்டு வருகிறார்கள். தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினோம். இப்போது கூட வருகின்ற 18-ந்தேதி வள்ளுவர் கோட்டத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்களும், நானும், நமது நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருக்கப்போகிறோம் என தெரிவித்தார்.

assembly election,dmk,tamil nadu,mk stalin ,சட்டமன்றத் தேர்தல், திமுக, தமிழ்நாடு, எம்.கே.ஸ்டாலின்

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி என்ன செய்கிறார்?. விவசாயிகளைத் தீவிரவாதிகள் என்று கூறிய பா.ஜ.க.வை ஆதரிக்கிறார். விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் 3 வேளாண் சட்டங்களை ஆதரிக்கிறார். விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுவரும் இலவச மின்சாரத்தை ரத்துசெய்ய விரும்பும் பா.ஜ.க.வுடன் கைகோர்த்து நிற்கிறார். பா.ஜ.க.வை முறைத்தால், எந்த நேரத்தில் வருமான வரித்துறை சோதனை வரும், எந்த நேரத்தில் அமலாக்கத்துறை சோதனை வரும், எந்த நேரத்தில் சி.பி.ஐ. வழக்கு வரும் என்று தெரியாது என ஸ்டாலின் கூறினார்.

மேலும் அவர், ஒவ்வொரு கூட்டத்திலும் ஆயிரக்கணக்கான தி.மு.க. தொண்டர்களை மட்டுமல்ல மக்களையும் சந்தித்துவருகிறேன். தி.மு.க.வின் “தமிழகம் மீட்போம்” என்ற தேர்தல் சிறப்புக் கூட்டத்தை ஒரு கோடிப் பேர் பார்த்திருக்கிறார்கள். இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால் தி.மு.க.வுடன் சேர்ந்து தமிழகத்தை மீட்க மக்கள் தயாராகி விட்டார்கள். அந்த பணியில் நான் தொடர்ந்து அயராது உழைக்க வேண்டும். ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவருக்கு வேலைகிடைக்க, ஒவ்வொரு வீட்டிலும் வருமானம் பெருக, ஒவ்வொரு மாவட்டமும் தொழில் வளர்ச்சியில் ஒன்றையொன்று மிஞ்சிச்செல்ல, அ.தி.மு.க. ஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்புவோம். நம் தமிழகத்தை மீட்போம் என நிகழ்ச்சியில் பேசினார்.

Tags :
|