Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கோத்தகிரி அரவேணு பகுதியில் குடியிருப்பு பகுதிக்குள் வலம் கரடிகளால் மக்கள் அச்சம்

கோத்தகிரி அரவேணு பகுதியில் குடியிருப்பு பகுதிக்குள் வலம் கரடிகளால் மக்கள் அச்சம்

By: Nagaraj Sat, 11 July 2020 9:35:06 PM

கோத்தகிரி அரவேணு பகுதியில் குடியிருப்பு பகுதிக்குள் வலம் கரடிகளால் மக்கள் அச்சம்

குடியிருப்பு பகுதிகளில் வலம் வரும் கரடிகள்... கோத்தகிரி அரவேணு பகுதியில் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகில் வலம் வரும் கரடிகளால் தோட்ட தொழிலாளர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் முழுவதும் பெரும்பாலான பகுதிகள் வனப்பகுதியை ஒட்டி காணப்படுகிறது. இதில் குறிப்பாக தேயிலை தோட்டங்களும் அடங்கும் இது போன்ற வனப்பகுதிகளில் புலி,சிறுத்தை,கரடி , காட்டு எருமை மற்றும் பல அரிய வகையான காட்டு விலங்குகள் வாழ்ந்து வருகின்றன.

bears,kotagiri,nilgiris,people,fear,misfortunes ,கரடிகள், கோத்தகிரி, நீலகிரி, மக்கள், அச்சம், அசம்பாவிதங்கள்

இதில் ஒரு சில விலங்குகள் மனிதர்களை எந்த ஒரு அச்சுறுத்தலுக்கு உள்ளாக்குவதில்லை . ஆனால் கரடி, சிறுத்தை போன்ற விலங்குகளால் மனிதர்கள் அடிக்கடி தாக்கபட்டு படுகாயம் அடைவதும் உண்டு சில சமயங்களில் தாக்குவதும் உண்டு இந்நிலையில் கோத்தகிரி அரவேணு பகுதியை அடுத்த ராப்ராய் எஸ்டேட் பகுதியை ஒட்டியுள்ள குடியிருப்பு பகுதிகளில் இரண்டு கரடிகள் உலா வந்தன .

இதனை கண்ட அப்பகுதி மக்கள் கூச்சலிட்டனர் மேலும் அக்கரடிகளை காட்டு பகுதிகளுக்குள் விரட்டி விட்டனர் . இது போன்ற காட்டு விலங்குகள் அடிக்கடி குடியிருப்பு பகுதிகளுக்குள் வருவது வாடிக்கையாகி விட்டது என கூறும் அப்பகுதி குடிருப்புவாசிகள் பலமுறை வனத்துறையிடம் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அசம்பாவிதங்கள் ஏதேனும் நடப்பதற்கு முன்பாக கரடிகளை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
|
|
|