Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் புதிய இயல்பு வாழ்க்கைக்கு பழக மக்கள் தடுமாற்றம்

தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் புதிய இயல்பு வாழ்க்கைக்கு பழக மக்கள் தடுமாற்றம்

By: Nagaraj Thu, 21 May 2020 1:58:38 PM

தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் புதிய இயல்பு வாழ்க்கைக்கு பழக மக்கள் தடுமாற்றம்

கொரோனா ஊரடங்கு உத்தரவு தற்போது தளர்த்தப்பட்டு வருகிறது. இருப்பினும் புதிய இயல்பு வாழ்க்கைக்கு பழகிக் கொள்ள முடியாமல் மக்கள் அனைவரும் திணறி வருகின்றனர்.

கொரோனா வைரஸ், கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக, உலக நாடுகளை தாக்கி வருகிறது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 50 லட்சத்து, 10 ஆயிரத்து, 113ஆக உயர்ந்துள்ளது. இதில், 19 லட்சத்து, 75 ஆயிரத்து, 978 பேர் குணம் அடைந்துள்ளனர். அதே நேரத்தில், மூன்று லட்சத்து, 25 ஆயிரத்து, 332 பேர் பலியாகி உள்ளனர்.

new nature,people straining,hoteliers,economists ,புதிய இயல்பு, மக்கள் திணறல், ஓட்டல், பொருளாதார நிபுணர்கள்

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அனைத்து நாடுகளிலும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது. தற்போது இந்த கட்டுப்பாடுகள், பல்வேறு நாடுகளில் தளர்த்தப்பட்டுள்ளன. இழந்த பொருளாதாரத்தை மீட்க மக்கள் தயாராகி வருகின்றனர். இருப்பினும் பள்ளி, அலுவலகம், பொது போக்குவரத்து, உணவகங்கள் என பல இடங்களில், சமூக இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகள் தொடர்கின்றன.

இந்த புதிய இயல்பு வாழ்க்கைக்கு பழக முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். இது மக்களுக்கு சுலபமானதாக இல்லை. இந்தக் கட்டுப்பாடுகளால் தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளன. 'ஓட்டல், பார்களில், இனி கூட்டம் கூட்டமாக அமர்ந்து சாப்பிட முடியாது.

இதனால், ஓட்டல் உட்பட அனைத்து தொழில்களுக்கும் வருவாய் பாதிப்பு நிச்சயம் இருக்கும்' என, பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags :