Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மணிப்பூரில் மீண்டும் மோதல் போக்கு அதிகரித்துள்ளதால் மக்கள் கவலை

மணிப்பூரில் மீண்டும் மோதல் போக்கு அதிகரித்துள்ளதால் மக்கள் கவலை

By: Nagaraj Fri, 12 May 2023 6:29:53 PM

மணிப்பூரில் மீண்டும் மோதல் போக்கு அதிகரித்துள்ளதால் மக்கள் கவலை

மணிப்பூர்: அமைதி திரும்பிய மணிப்பூரில் தற்போது மீண்டும் மோதல் போக்கு அதிகரித்துள்ளதால் அங்கு நிலைமை சிக்கலாகியிருக்கிறது.

மணிப்பூர் மாநிலத்தின் சுராசந்த்பூரில் குகி இனத்தவர் நடத்திய தாக்குதலில் போலீஸ் கமாண்டோ ஒருவர் கொல்லப்பட்டார். 5 பேர் காயமடைந்துள்ளனர். மணிப்பூர் மாநிலத்தில், இடம்பெயர்ந்த சமூகங்களுக்கு பழங்குடியினர் அந்தஸ்து அறிவிக்கப்பட்டதற்கு எதிராக பழங்குடியினர் சமீபத்தில் பேரணி நடத்தினர்.

conflict,escalation,manipur,peace,trend, ,அதிகரிப்பு, அமைதி, போக்கு, மணிப்பூர், மோதல்

இந்த பேரணியில் கலவரம் ஏற்பட்டது. வீடுகள், கடைகள்,வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டு, ராணுவமும் களமிறக்கப்பட்டது. இந்த நிலையில், போலீசார் ரோந்து சென்று கொண்டிருந்த போது, குக்கி சமூகத்தை சேர்ந்த தீவிரவாதிகள் குழு ஒரு கமாண்டோவை துப்பாக்கியால் சுட்டனர்.

அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். மேலும் சிலர் காயம் அடைந்தனர். துணை ராணுவப் படையினர் அங்கு சென்று காயமடைந்த கமாண்டோக்களை மீட்டனர். இதற்கிடையில், மக்கள் தாங்கள் எந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதைக் குறிக்க அவர்களின் வீட்டு வாசலில் பெயர்களை எழுதுகிறார்கள்.
தாக்குதல்களைத் தவிர்க்க இந்த உத்தியைப் பயன்படுத்துவதாக உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர். அமைதி திரும்பிய மணிப்பூரில் தற்போது மீண்டும் மோதல் போக்கு அதிகரித்துள்ளதால் அங்கு நிலைமை சிக்கலாகியிருக்கிறது.

Tags :
|
|