Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பெருமிதம் கொள்கிறோம் என்று மக்கள் கடிதம் எழுதுகின்றனர்... பிரதமர் தகவல்

பெருமிதம் கொள்கிறோம் என்று மக்கள் கடிதம் எழுதுகின்றனர்... பிரதமர் தகவல்

By: Nagaraj Sun, 27 Nov 2022 4:05:52 PM

பெருமிதம் கொள்கிறோம் என்று மக்கள் கடிதம் எழுதுகின்றனர்... பிரதமர் தகவல்

புதுடில்லி: ஜி-20 அமைப்பின் இந்தியாவின் தலைமை குறித்து தாங்கள் எவ்வளவு பெருமிதம் கொள்கிறோம் என்று நாடு முழுவதிலுமிருந்து மக்கள் எனக்கு கடிதம் எழுதி வருகின்றனர் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை வானொலியில் மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் மக்களிடம் உரையாற்றி வருகிறார். அதில், பல நல்ல விஷயங்களைப் பகிர்ந்துள்ளார். இதன்படி இம்மாத மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று இன்று காலை பேசினார்.


இது 95வது நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, 100-வது மன் கி பாத் நிகழ்ச்சியை நோக்கி பயணிக்கிறோம் என்று கூறினார். நாட்டு மக்களுடன் இணையும் முக்கியமான திட்டம் இது என்றார்.

g20 summit,mann ki bhat,modi,g-20 summit,prime minister modi,mann ki baat programme ,ஜி-20 தலைமை, பிரதமர் மோடி, மன் கி பாத் நிகழ்ச்சி

ஜி-20 அமைப்பின் இந்தியாவின் தலைமை குறித்து தாங்கள் எவ்வளவு பெருமிதம் கொள்கிறோம் என்று நாடு முழுவதிலுமிருந்து மக்கள் எனக்கு கடிதம் எழுதி வருகின்றனர். அம்ரித் கால் திட்டத்தின் கீழ் இந்தியா இந்த வாய்ப்பைப் பெற்றுள்ளது. இது மிகவும் முக்கியமானது என்றும் அவர் கூறினார்.

ஜி-20 தலைமை எங்களுக்கு ஒரு வாய்ப்பு. உலகளாவிய ஆர்வமுள்ள விஷயங்களில் நாம் கவனம் செலுத்த வேண்டும். அது அமைதியோ, ஒற்றுமையோ அல்லது நிலையான வளர்ச்சியோ.

தொடர்புடைய பிரச்சினைகளுக்கு இந்தியாவில் தீர்வு உள்ளது. ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற கருப்பொருளை கொண்டுள்ளோம் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். மேலும் அவர் கூறியதாவது, கடந்த ஆண்டை விட, இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் இசைக்கருவிகளின் எண்ணிக்கை 3.5 மடங்கு அதிகரித்துள்ளது. இதிலிருந்து இந்திய பாரம்பரிய இசை மீது உலக நாடுகளின் ஆர்வம் வெளிப்படுகிறது.

கடந்த 8 ஆண்டுகளில், இசைக்கருவி ஏற்றுமதி 3.5 மடங்கு அதிகரித்துள்ளது. மின்சார இசைக் கருவிகளின் ஏற்றுமதியும் 60 மடங்கு அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் இந்திய கலாசாரம் மற்றும் இசை மீதான ஆர்வம் அதிகரித்து வருவதற்கான அறிகுறியாகும் என்றார்.

Tags :
|