Advertisement

இலங்கையில், அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட மக்கள்..

By: Monisha Sat, 09 July 2022 6:33:22 PM

இலங்கையில், அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட மக்கள்..

இலங்கை: இலங்கையில் கடும் பெருளாதார நெருக்கடி நிலவும் இந்நிலையில் ஆத்திரமடைந்த கும்பல் அதிபர் மாளிகையை முற்றுகையிட்டதால், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தப்பியோடினார்.

இலங்கையில் வரலாறு காணாத அளவு பொருளாதார நெருக்கடி நிலவுகிறது, அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டுவதால், வாழ வழியின்றி மக்கள் தவிக்கின்றனர்.

இந்நிலையில், அப்போது பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே, அதிபர் கோத்தபய ராஜபக்சே ஆகியோருக்கு எதிராக மக்கள் கடந்த ஏப்ரல் 9ம் தேதி போராடத்தை தொடங்கினர்.நாட்டின் இந்த இக்கட்டான நிலைக்கு, ராஜபக்சே குடும்பத்தின் குடும்ப அரசியலும், ஊழலும் தான் காரணம் மக்கள் கொதித்து எழுந்தனர்.

srilanka,protest,econmic issue,price ,இலங்கை,பெருளாதாரம்,அதிபர்,மாளிகை,

இலங்கையில் எரிவாயு சிலிண்டர், பெட்ரோல் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளில் இருந்து மீள முடியாமல் மக்கள், அன்றாட உணவு தேவைகளை கூட வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

எனவே, தனது உயிரை காப்பாற்றிக் கொள்ள இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே ஆம்புலன்ஸ் மூலம், அதிபர் மாளிகையிலிருந்து தப்பியோடி விட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அவர் ராணுவ தலைமையகத்தில் தஞ்சம் புகுந்திருக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags :