Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் மேலும் உயரும் வெப்பநிலை ..மக்களே எச்சரிக்கை

தமிழகத்தில் மேலும் உயரும் வெப்பநிலை ..மக்களே எச்சரிக்கை

By: vaithegi Mon, 07 Aug 2023 3:47:07 PM

தமிழகத்தில் மேலும் உயரும் வெப்பநிலை  ..மக்களே எச்சரிக்கை

சென்னை: சமீபத்திய வருடங்களில் மிக வெப்பமான ஆகஸ்ட் மாதம் இந்தாண்டு பதிவாகியிருக்கிறது. இதனை அடுத்து கோடை முடிந்து 2 மாதங்களுக்கு மேல் ஆகியும் தமிழகத்தில் வெப்பநிலையானது இன்னும் குறைந்தபாடில்லை.

ஆனால் சில நேரங்களில் சில இடங்களில் மழை பெய்த வந்தாலும், பின்னர் வெப்பம் உச்சத்தை தொட்டு வருகிறது. இதையடுத்து நேற்று கூட மதுரையில் 41.7 டிகிரி வெப்பம் பதிவானது. ஆகஸ்ட் மாதத்திற்கு இந்த வெப்பநிலை மிகவும் அதிகமாகும். இதனால் கவனமாக இருக்கும்படி வானிலை மையம் எச்சரித்து கொண்டு வருகிறது.

temperature,weather station ,வெப்பநிலை  , வானிலை மையம்


அதிகபட்ச வெப்பநிலை:

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி முதல் 39 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். ஒருசில இடங்களில் இயல்பில் இருந்து 2 -4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.

அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது வெப்ப அழுத்தம் காரணமாக அசௌகரியம் ஏற்படலாம். இதனால், பொதுமக்கள் வெளியே செல்லும்பொழுது, மிகவும் கவனமாக செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Tags :