Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா தடுப்பூசியை மக்கள் இலவசமாக செலுத்திக்கொள்ளல்லாம் - டிரம்ப் நிர்வாகம் அறிவிப்பு

கொரோனா தடுப்பூசியை மக்கள் இலவசமாக செலுத்திக்கொள்ளல்லாம் - டிரம்ப் நிர்வாகம் அறிவிப்பு

By: Karunakaran Thu, 17 Sept 2020 09:14:09 AM

கொரோனா தடுப்பூசியை மக்கள் இலவசமாக செலுத்திக்கொள்ளல்லாம் - டிரம்ப் நிர்வாகம் அறிவிப்பு

கொரோனா வைரசுக்கான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் ரஷியா, சீனா, அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா போன்ற நாடுகள் முன்னிலையில் உள்ளன. பல தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு அவை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்யும் இறுதிக்கட்ட முயற்சியில் பல நிறுவனங்கள் முன்னேற்றம் அடைந்து வருகின்றன. அமெரிக்கா கொரோனாவுக்கான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் நவம்பர் 3 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளதால் அதற்கு முன்னதாக தடுப்பூசியை கண்டுபிடித்து மக்களுக்கு வழங்க டிரம்ப் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. தேர்தலை கருத்தில் கொண்டு இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தும் முயற்சியில் அதிபர் டிரம்ப் முயற்சி செய்து வருகிறார். இந்நிலையில், அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தடுப்பூசி இன்னும் 3 அல்லது 4 வாரங்களில் தயாராகிவிடும் என டிரம்ப் நேற்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.

corona vaccine,free,trump administration,america ,கொரோனா தடுப்பூசி, இலவசம், டிரம்ப் நிர்வாகம், அமெரிக்கா

இந்நிலையில் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் மூத்த அதிகாரி ஒருவர், தற்போது பரிசோதனை நிலையில் உள்ள கொரோனா தடுப்பூசிகளை பயன்பாட்டிற்கு கொண்டுவர அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகமான எஃப்டிஏ அனுமதி அளித்த உடன் தடுப்பூசி விநியோகம் விரைவாக செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும், இந்த தடுப்பூசிக்கு மக்களிடம் இருந்து எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது. மக்கள் இலவசமாக தடுப்பூசியை செலுத்திக்கொள்ளலாம் என கூறியுள்ளார்.

இதுகுறித்து கொரோனா தடுப்பூசியை விநியோகம் செய்வதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள துறையின் மூத்த அதிகாரியான பால் ஒஸ்டோஸ்கி கூறுகையில், கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த அனுமதி கிடைத்த 24 மணி நேரத்தில் அமெரிக்கா முழுவதும் விநியோகம் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Tags :
|