Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பெலாரஸ் நாட்டின் அதிபர் பதவி விலகக்கோரி மக்கள் தொடர்ந்து 3-வது வாரமாக போராட்டம்

பெலாரஸ் நாட்டின் அதிபர் பதவி விலகக்கோரி மக்கள் தொடர்ந்து 3-வது வாரமாக போராட்டம்

By: Karunakaran Mon, 31 Aug 2020 4:13:24 PM

பெலாரஸ் நாட்டின் அதிபர் பதவி விலகக்கோரி மக்கள் தொடர்ந்து 3-வது வாரமாக போராட்டம்

ஒருங்கிணைந்த சோவியத் ரஷியாவில் இருந்து 1991 ஆம் ஆண்டு பெலாரஸ் பிரிந்து தனி நாடாக அறிவிக்கப்பட்டது. அதன்பின், அந்நாட்டில் 1994 ஆம் ஆண்டு முதல் முறையாக அதிபர் தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் அலெக்சாண்டர் லூகாஷென்கோ வெற்றிபெற்றார். அதன்பின், அனைத்து தேர்தல்களிலும் அலெக்சாண்டரே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில் அந்நாட்டில் கடந்த 9 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றபோது, அலெக்சாண்டர் 80.23 சதவிகித வாக்குகளை பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இதனால் அலெக்சாண்டர் 6-வது முறையாக அதிபராக தேர்தெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், இந்த தேர்தலில் வெளியான முடிவுகள் மோசடியானவை என எதிர்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகிறது. மேலும், ஆயிரக்கணக்கானோர் அதிபருக்கு எதிராக கடந்த 3 வாரமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

resign,president,belarus,protest ,ராஜினாமா, ஜனாதிபதி, பெலாரஸ், எதிர்ப்பு

தலைநகர் மின்ஸ்க்கில் நேற்று திரண்ட திரளான மக்கள் அதிபர் அலெக்சாண்டர் பதவி விலக்கக்கோரி கோஷங்களை எழுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களை தடுக்கும் விதமாக பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டிருந்தனர். ஒரு கட்டத்தில் போராட்டக்காரர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இந்த போராட்டத்தில் பங்கேற்ற பலர் கைது செய்யப்பட்டனர். இதன் காரணமாக அங்கு பெரும் பதற்றம் நீடித்து வருகிறது. இந்த சூழ்நிலையில், அதிபர் அலெக்சாண்டர் லூகாஷென்கோ நேற்று தனது 66 ஆவது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|