Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொலேராடோ மாகாணத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டால் மக்கள் அச்சம்

கொலேராடோ மாகாணத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டால் மக்கள் அச்சம்

By: Nagaraj Mon, 06 Feb 2023 10:14:48 AM

கொலேராடோ மாகாணத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டால் மக்கள் அச்சம்

வாஷிங்டன்: அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் உள்ள பால்கன் பகுதியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

எல் பாசோ கவுண்டி ஷெரிப் அலுவலகத்தின் அழைப்பு மையத்திற்கு பல அழைப்புகள் வந்தன. இதையடுத்து ஷெரீப் அலுவலக அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர்.

இதில், காயமடைந்த 5 பேர் சம்பவ இடத்தில் இருந்து மீட்கப்பட்டு சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். எனினும், அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். மற்றவர்கள் மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர். பாயின்ட் ரெய்ஸ் டிரைவ் பகுதியில் ஏராளமான துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்டதாக ஷெரிப் அலுவலகம் தெரிவித்துள்ளது.

america,death,injury,shooting , அமெரிக்கா, உயிரிழப்பு, காயம், துப்பாக்கி சூடு

இந்த தாக்குதலின் பின்னணியில் உள்ள நோக்கம் தெரியவில்லை. பலருக்கு தொடர்பு இருக்கலாம் என விசாரணை அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். எவ்வாறாயினும், கடந்த சனிக்கிழமை பாட்டர் டிரைவ் பகுதியில் இடம்பெற்ற வாகனத் திருட்டுக்கும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்கும் தொடர்பில்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் நடந்த போது குடியிருப்பு பகுதியில் உள்ளவர்களிடம் புகைப்படம் உள்ளதா? எல் பாசோ கவுண்டி ஷெரிப் அலுவலகம் கேட்டு கொண்டு உள்ளது. அவர்களின் புலனாய்வாளர்களுடன், கொலராடோ ஸ்பிரிங்ஸ் காவல் துறை மற்றும் மத்திய புலனாய்வு துறையும் ஆகியவை குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.

Tags :
|
|