Advertisement

அத்தியாவசிய பொருட்கள் கொள்வனவு செய்ய குவிந்த மக்கள்

By: Nagaraj Sun, 04 Oct 2020 3:46:54 PM

அத்தியாவசிய பொருட்கள் கொள்வனவு செய்ய குவிந்த மக்கள்

கடைகளில் குவியும் மக்கள்... கம்பஹாவில் கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து, கொழும்பிலுள்ள கடைகளில் அத்தியாவசியப் பொருட்களைக் கொள்வனவு செயவதற்காக மக்கள் முண்டியடிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) கம்பஹா- திவுலப்பிடிய பகுதியில் பெண்ணொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் உள்ள பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.

மேலும், குறித்த பகுதிகளுக்கு நுழைவது மற்றும் வெளியேறுவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

shops,essentials,people,corona,shopping ,கடைகள், அத்தியாவசியம், மக்கள், கொரோனா, கொள்வனவு

இதேவேளை கம்பஹாவின் சில பகுதிகளில் வசிப்போர், தமது நகர எல்லையை விட்டு வேறு நகருக்கு பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதியான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இந்நிலையிலேயே மக்கள் இவ்வாறு அத்தியவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்ய கடைகளில் குவியத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|
|