Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கடும் குளிர், மின்சாரம் துண்டிப்பால் அமெரிக்காவில் மக்கள் பெரும் பாதிப்பு

கடும் குளிர், மின்சாரம் துண்டிப்பால் அமெரிக்காவில் மக்கள் பெரும் பாதிப்பு

By: Nagaraj Tue, 27 Dec 2022 10:42:07 AM

கடும் குளிர், மின்சாரம் துண்டிப்பால் அமெரிக்காவில் மக்கள் பெரும் பாதிப்பு

அமெரிக்கா: தேசிய வானிலை சேவை அறிவிப்பு... அமெரிக்காவில் நிலவிவரும் கடுமையான குளிர் மற்றும் பனிப்புயலானது கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தையே முடக்கிவிட்டதாக அமெரிக்க தேசிய வானிலை சேவை தெரிவித்திருக்கிறது.

கடுமையான பனிப்புயல் மற்றும் குளிரால் மின்சாரம் துண்டிப்பு, போக்குவரத்து பாதிப்பு போன்ற பிரச்னைகளை மக்கள் சந்தித்து வருகின்றனர் எனவும், மேலும் இந்த புயலால் நாட்டின் கிழக்குப்பகுதிகளில் 32 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

”அமெரிக்காவின் கிழக்குப்பகுதிகளில் அடர்ந்த குளிர் நிலவுகிறது. செவ்வாய்க்கிழமைக்கு மேல்தான் இந்த நிலைமை சரியாகும்” என NWS தெரிவித்திருக்கிறது. நியூயார்க்கின் பஃபலோ நகரானது பனிப்புயலில் மாயமாகிவிட்டதாகவும், அங்கு அவசரகால சேவை தேவைப்படுகிறது எனவும் கூறப்பட்டுள்ளது.

situation,blizzard,blew,electricity,no,instruction ,நிலைமை,  பனிப்புயல், வீசியது, மின்சாரம், இல்லை, அறிவுறுத்தல்

பஃபலோ நகரில் 8 அடி உயரத்துக்கு(2.4 மீட்டர்) அளவுக்கு பனிப்பொழிவு உள்ளதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு மக்களின் உயிருக்கே ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ”தற்போது போர்க்கால சூழல் போன்று நிலவுகிறது.

சாலையில் செல்லும் வாகனங்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளன. இது மிகவும் மோசமான, உயிருக்கே ஆபத்து ஏற்படுத்தக்கூடிய நிலை” என்று நியூயார்க் கவர்னர் கேத்தி ஹோச்சல் கூறியுள்ளார். மேலும், அனைவரும் வீட்டுக்குள்ளேயே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கிழக்கு மாகாணங்களில் கிறிஸ்துமஸ் தினத்தன்று காலையில் 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் மின்சாரம் இல்லாமலே நாளை தொடங்கினர். கிட்டத்தட்ட 5 நாட்களாக கடுமையான பனிப்புயல் வீசியதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

Tags :
|
|