Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா அச்சத்தால் மின்சார சைக்கிளில் பணிக்கு செல்லும் பிரான்ஸ் மக்கள்

கொரோனா அச்சத்தால் மின்சார சைக்கிளில் பணிக்கு செல்லும் பிரான்ஸ் மக்கள்

By: Nagaraj Thu, 18 June 2020 08:52:07 AM

கொரோனா அச்சத்தால் மின்சார சைக்கிளில் பணிக்கு செல்லும் பிரான்ஸ் மக்கள்

பிரான்ஸில் கொரோனா அச்சத்தால், பொதுமக்கள் மெட்ரோ ரயில் பயணங்களை தவிர்த்து, மின்சார சைக்கிள்களில் பணிக்கு சென்று வருகின்றனர். மேலும் மின் சைக்கிள்கள் வாங்க அரசு மானியம் அளித்து வருகிறது.

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது வரை 125 நாடுகளில் பரவில் உள்ளது. சர்வதேச அளவில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 84 லட்சத்தை நெருங்கி வருகிறது. பிரான்சிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்தது. இதனால் மக்கள் மிகுந்த அச்சத்தில் இருந்து வருகின்றனர்.

bicycle,metro,corona,increase,traffic ,சைக்கிள், மெட்ரோ, கொரோனா, அதிகரிப்பு, போக்குவரத்து

இந்நிலையில் கொரோனா பரவலை தடுக்க, பொதுப்போக்குவரத்தை தவிர்க்குமாறு மாநகராட்சி அறிவுறுத்தியதால், தலைநகர் பாரிஸில் சைக்கிள் பயணங்களுக்காக பிரத்யேகமாக போடப்பட்டுள்ள 1000 கிலோமீட்டர் தூர சாலைகளில் போக்குவரத்து அதிகரித்து கொண்டே வருகிறது.

மேலும், 1000 யூரோ மதிப்பிலான மின்சார சைக்கிளை வாங்க, 400 யூரோக்களை அரசு மானியமாக வழங்குகிறது. இதனால் மின்சார சைக்கிளின் விற்பனை மும்மடங்கு உயர்ந்துள்ளது. பிரான்சில் சைக்கிள்கள் உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

Tags :
|
|