Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் யாழ்ப்பாணம் மக்கள் பாதிப்பு

தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் யாழ்ப்பாணம் மக்கள் பாதிப்பு

By: Nagaraj Thu, 03 Dec 2020 08:47:50 AM

தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் யாழ்ப்பாணம் மக்கள் பாதிப்பு

கடும் மழையால் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை மற்றும் காற்று காரணமாக தற்போதுவரை 459 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 589 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

அத்துடன், வேலணை பகுதியைச் சேர்ந்த இருவர் மற்றும் சங்கானை பகுதியைச் சேர்ந்த ஒருவர் என மூவர் காணாமல் போயுள்ளதாகவும், மூவர் காயமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

interruption,camps,continuous rain,people,vulnerability ,இடைத்தங்கல், முகாம்கள், தொடர் மழை, மக்கள், பாதிப்பு

தொடர் மழை மற்றும் காற்று காரணமாக யாழ். மாவட்டத்தில் இதுவரை 15 வீடுகள் முழு அளவிலும் 141 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. குறிப்பாக சண்டிலிப்பாய், சாவகச்சேரி மற்றும் பருத்தித்துறை பகுதியிலேயே அதிகமான வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக சூரியராஜா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இடம்பெயர்பவர்களைத் தங்கவைப்பதற்காக நான்கு இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags :
|
|