Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமெரிக்காவில் அடுத்த வாரம் முதல் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் - டிரம்ப்

அமெரிக்காவில் அடுத்த வாரம் முதல் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் - டிரம்ப்

By: Karunakaran Mon, 07 Dec 2020 09:59:03 AM

அமெரிக்காவில் அடுத்த வாரம் முதல் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் - டிரம்ப்

உலகிலேயே கொரோனா வைரஸ் அதிகம் பாதிக்கப்பட்ட முதல் நாடாக தொடர்ந்து அமெரிக்கா உள்ளது. அமெரிக்காவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒன்றரைக் கோடியை நெருங்கிக் கொண்டிருக்கிறது. மேலும், பலி எண்ணிக்கையும் 3 லட்சத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. முதல் அலையை விட கொரோனா 2-வது அலை அதிகமாக பரவி வருகிறது.

கொரோனா பரவும் அதே வேகத்தில் தடுப்பூசியை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளில் முழு மூச்சில் நடந்து வருகின்றன. அமெரிக்காவின் பைசர் மற்றும் மாட்டானா ஆகிய 2 நிறுவனங்கள் தயாரித்துள்ள தடுப்பூசிகள் இறுதிக்கட்ட பரிசோதனையை முடித்து உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகத்தின் ஒப்புதலுக்காக காத்திருக்கின்றன.

united states,corona vaccine,corona virus,trump ,அமெரிக்கா, கொரோனா தடுப்பூசி, கொரோனா வைரஸ், டிரம்ப்

இந்நிலையில் அமெரிக்காவில் அடுத்த வாரம் முதல் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என ஜனாதிபதி டிரம்ப் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் , தடுப்பூசி சாத்தியமில்லை என யாவரும் நினைத்திருந்தநிலையில், எங்களது தடுப்பூசி வந்து கொண்டிருக்கின்றன என்று தெரிவித்தார்.

மேலும் அவர், இதை செய்து முடிக்க மற்றொரு நிர்வாகம் 5 வருடங்கள் எடுத்திருக்கும். ஆனால் நாங்கள் அதை 7 மாதத்தில் செய்து முடித்துள்ளோம். அவை அடுத்த வாரம் பயன்பட்டுக்கு வருகின்றன. நாங்கள் தடுப்பூசி போட தொடங்கப் போகிறோம். நிறைய பேருக்கு ஏற்கனவே தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

Tags :