Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நாளுக்கு நாள் புதிய உச்சம் தொடும் தக்காளி .. அதிச்சியில் மக்கள்

நாளுக்கு நாள் புதிய உச்சம் தொடும் தக்காளி .. அதிச்சியில் மக்கள்

By: vaithegi Mon, 31 July 2023 09:40:02 AM

நாளுக்கு நாள் புதிய உச்சம் தொடும் தக்காளி .. அதிச்சியில் மக்கள்

சென்னை: கடந்த 8 நாட்களில் மட்டும் தக்காளி விலை ரூ. 80 வரை அதிகரிப்பு ..நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பெய்து வரும் மழையால் விளைச்சல் பாதிக்கப்பட்டு, தக்காளி வரத்து வெகுவாக சரிந்து உள்ளது. இதனால் தக்காளிக்கு கடும் கிராக்கி ஏற்பட்டு உள்ளது. ஆனால் ஒரு காலத்தில் கிலோ 10 ரூபாய்க்கு விற்கப்பட்ட தக்காளி, கடந்த ஒரு மாதமாக 100 ரூபாயை தாண்டியே விற்பனையாகி வருகிறது.

இதையடுத்து சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் 1 கிலோ ரூ.150 என்கிற அளவிலும், சில்லறை விற்பனையில் கிலோ ரூ.180 என்கிற அளவில் விற்பனையானது. அதன் பின்னர் இடையில் தக்காளி விநியோகம் சீரானதால் விலை சற்று குறைந்தது.

tomatoes,people ,தக்காளி ,மக்கள்


அந்தவகையில் கடந்த 24-ம் தேதி வாக்கில் மொத்த விற்பனையில் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், சில்லறை விற்பனையில் ரூ.100க்கும் விற்கப்பட்டது. அதன்பின் மீண்டும் தக்காளி விலை உயர்ந்து வருகிறது. அந்தவகையில் நேற்று முன்தினம் 1 கிலோ ரூ.140க்கு விற்கப்பட்ட நிலையில் நேற்று ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.20 அதிகரித்தது. கோயம்பேடு சந்தையில் மொத்த விற்பனையில் 1 கிலோ ரூ.160க்கும் , சில்லறை விற்பனையில் 1 கிலோ ரூ.180க்கு விற்பனையானது.

இதன் தொடர்ச்சியாக இன்றும் தக்காளி விலை கிலோவுக்கு 20 ரூபாய் அதிகரித்து 1 கிலோ ரூ.180க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் சில்லறை விற்பனையில் பல இடங்களில் ஒரு கிலோ தக்காளி ரூ.200ஐ தொட்டு உள்ளது. இந்நிலையில் கடந்த 8 நாட்களில் மட்டும் சென்னையில் தக்காளி விலை ரூ. 80 வரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :