Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா ... பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை ... மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்

கொரோனா ... பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை ... மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்

By: vaithegi Sat, 24 Dec 2022 6:38:59 PM

கொரோனா     ...   பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை   ...   மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்

சென்னை: உலகம் முழுவதும் பல நாடுகளில் மீண்டும் கொரோனா தொற்று வேகம் எடுத்து கொண்டு வருகிறது. நாளுக்கு நாள் உயரும் பாதிப்பு எண்ணிக்கை மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை அடுத்து மீண்டும் மக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி கொள்ள வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. அண்மையில் கொரோனா நோய் தடுப்பு பணிகள் பற்றி மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.

corona,minister of public welfare,public ,கொரோனா     , மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ,பொதுமக்கள்

இதையடுத்து அப்போது மாநில அரசுகளுக்கு கொரோனா தடுப்பு பற்றிய முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டது.அதன் அடிப்படையில் தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கான 72,000 படுக்கை வசதிகள் முன்னதாகவே தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

இத்தகவலை தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். அதேபோன்று ஆக்சிஜன் சிலிண்டர் ஜெனரேட்டர் மருத்துவ கருவிகளும் தயாராக உள்ளது. அதனால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என அவர் கூறியுள்ளார்.

Tags :
|