Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஊருக்குள் நுழைய விடாத மக்கள்; சுடுகாட்டில் இரவு முழுவதும் தங்கிய குடும்பத்தினர்

ஊருக்குள் நுழைய விடாத மக்கள்; சுடுகாட்டில் இரவு முழுவதும் தங்கிய குடும்பத்தினர்

By: Nagaraj Sun, 12 July 2020 9:42:50 PM

ஊருக்குள் நுழைய விடாத மக்கள்; சுடுகாட்டில் இரவு முழுவதும் தங்கிய குடும்பத்தினர்

கொரோனா பீதியால் ஊருக்கு நுழைய விடாததால் ஒரு குடும்பத்தினர் இரவு முழுவதம் சுடுகாட்டில் தங்கிய சம்பவம் பெரும் சரச்சையை கிளப்பி உள்ளது.

மேற்கு வங்காளத்தின் ஹவுரா மாவட்டத்தில், டெல்லியில் இருந்து தங்கள் வீட்டிற்குத் திரும்பிய ஒரு குடும்பத்தினருக்கு, கொரோனா பயத்தால் ஊருக்கு நுழைய அனுமதி மறுக்கப்பட்டதால், சுடுகாட்டில் ஒரு இரவு முழுவதும் கழிக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மொஹுவா முகர்ஜி மற்றும் அவரது மகன் ரோஹித் ஆகியோர் டெல்லியில் இருந்து ராஜதானி எக்ஸ்பிரஸ் மூலம் வெள்ளிக்கிழமை சொந்த ஊருக்கு திரும்பினர். ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு கணவரை இழந்த மொஹுவா, டெல்லியில் நகைத் தொழில் செய்யும் தனது மகனுடன் வசித்து வருகிறார்.

corona panic,fire,west bengal,family,delhi ,கொரோனா பீதி, சுடுகாடு, மேற்கு வங்காளம், குடும்பத்தினர், டெல்லி

தொற்றுநோய் காரணமாக அவர்களின் வணிகம் சரியாக நடக்காததால், தாயும், மகனும் மேற்கு வங்கத்தில் உள்ள தங்கள் பூர்வீக இடத்திற்குத் திரும்ப முடிவு செய்தனர்.

அவர்கள் அப்பகுதியை அடைந்ததும், டெல்லியில் இருந்து வந்துள்ளதால், அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருக்கக்கூடும் என்று கருதிய உள்ளூர்வாசிகள் தடுத்து நிறுத்தினர்.
இதனால் மொஹுவா, தனது மகனுடன் அருகில் உள்ள சஹாபூருக்குச் சென்றார். அங்கு அவரது தந்தைக்கு மற்றொரு வீடு உள்ளது. அந்தப் பகுதியினரும் அவர்களை அனுமதிக்கவில்லை.

இறுதியாக மொஹுவா தனது மகன், தந்தை மற்றும் ஒரு சகோதரருடன் அருகிலுள்ள பசுதேபூர் அகுன்காலி சுடுகாட்டிற்குச் சென்றார். அங்கு அவர்கள் ஒரு அறையில் இரவைக் கழித்தனர்.

நேற்று காலை இந்த சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரிகள் அறிந்ததும், அவர்கள் குடும்பத்தை அவர்களின் வீட்டிற்கு அழைத்துச் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஒரு வழியாக வீடு திரும்பியதும், மொஹுவா மற்றும் அவரது மகனை 14 நாட்கள் வீட்டு தனிமைப்படுத்தலில் தங்குமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர். இச்சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

Tags :
|
|