Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழக மக்களே உஷார்.. வெளுத்து வாங்கப்போகும் மழை.. வானிலை..

தமிழக மக்களே உஷார்.. வெளுத்து வாங்கப்போகும் மழை.. வானிலை..

By: Monisha Sun, 10 July 2022 8:11:32 PM

தமிழக மக்களே உஷார்.. வெளுத்து வாங்கப்போகும் மழை.. வானிலை..

தமிழ்நாடு: தமிழகத்தில் வரும் 14 வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

rain,weather,thunderstorm,lightning ,மழை ,வானிலை,காற்று,மின்னல்,

சென்னையை பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.அதிகபட்ச வெப்பநிலை 33 - 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

மேலும் மீனவர்களை கடலுக்கு செல்ல வேண்டாம் என தெரிவித்து உள்ளனர்.

Tags :
|