Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வெளிப்புறங்களில் மக்கள் கூட தடை: அல்பர்ட்டா மாகாண முதல்வர் அறிவிப்பு

வெளிப்புறங்களில் மக்கள் கூட தடை: அல்பர்ட்டா மாகாண முதல்வர் அறிவிப்பு

By: Nagaraj Thu, 10 Dec 2020 8:50:15 PM

வெளிப்புறங்களில் மக்கள் கூட தடை: அல்பர்ட்டா மாகாண முதல்வர் அறிவிப்பு

அல்பர்ட்டா மாகாண முதல்வர் அறிவிப்பு... கனடாவின் அல்பர்ட்டா மாகாணத்தில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் வெளிப்புறங்களில் மக்கள் கூட தடை விதிப்பதாக மாகாண முதல்வர் அறிவித்துள்ளார்.

அல்பர்ட்டா மாகாணத்தில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை 1,727 பேருக்கு கொரோனா உறுதியானது, இதன் மூலம் மாகாணத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 72,028 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், இன்றைய நிலவரப்படி, வெளிப்புறங்களில் மக்கள் கூடுவதற்கு தடை விதிப்பதாக மாகாண தலைவர்
ஜேசன் கென்னி அறிவித்துள்ளார். அதே சமயம் மாகாணத்தில தனிமையில் வாழ்பவர்கள் அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் உள்ள இரண்டு நபர்களுடன் கூட அனுமதியளிக்கப்படும் என மாகாண சுகாதாரத்துறை அமைச்சர் டைலர் ஷான்ட்ரோ தெளிவுப்படுத்தினார்.

procedure,province,alberta,implementation,four weeks ,நடைமுறை, மாகாணம், அல்பர்ட்டா, அமல்படுத்துதல், நான்கு வாரங்கள்

இத்துடன் மாகாணத்தால் பிற நடவடிக்கைகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தேவையான இடங்களில் கட்டாய சமூக இடைவெளி மற்றும் அனைத்து உட்புற பொது இடங்களிலும் கட்டாயமாக முகக் கவசம் அணிவது அமல்படுத்துதல் மற்றும் நூலகங்கள், அருங்காட்சியகங்கள், கேசினோக்கள் மற்றும் பிற பொழுதுபோக்கு மையங்கள் டிசம்பர் 13 முதல் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகள் மாகாணம் முழுவதும் குறைந்தபட்சம் நான்கு வாரங்கள் வரை நடைமுறையில் இருக்கும் என ஜேசன் கென்னி கூறினார்.

Tags :