Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமெரிக்காவில் அதிகரித்து வரும் துப்பாக்கி வன்முறைக்கு எதிராக மக்கள் போராட்டம்

அமெரிக்காவில் அதிகரித்து வரும் துப்பாக்கி வன்முறைக்கு எதிராக மக்கள் போராட்டம்

By: Monisha Sun, 12 June 2022 4:42:01 PM

அமெரிக்காவில் அதிகரித்து வரும் துப்பாக்கி வன்முறைக்கு எதிராக மக்கள் போராட்டம்

வாஷிங்டன் : அமெரிக்காவில் கடந்த மாதம் 24-ம் தேதி டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள உவால்டே பகுதியில் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. 18 வயது இளைஞர் நடத்திய இந்த துப்பாக்கிசூட்டில் 19 குழந்தைகள் உட்பட பலர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில், வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேட்டி அளிக்கையில், அமெரிக்காவில் அதிகரித்து வரும் துப்பாக்கி வன்முறை கலாச்சாரம் கவலை அளிக்கிறது. பாதுகாப்பு சட்டங்களை வலுப்படுத்த வேண்டும், துப்பாக்கி உற்பத்தியாளர்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

mass protests,washington,condemn,gun-violence,america ,வெகுஜன எதிர்ப்புகள், வாஷிங்டன், கண்டனம், துப்பாக்கி வன்முறை, அமெரிக்கா

தற்போது, அமெரிக்காவின் வாஷிங்டன் டிசி பகுதியில் துப்பாக்கி வன்முறைகளுக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். அப்போது, துப்பாக்கி வன்முறைக்கு எதிராக கோஷமிட்டனர்.
மேலும், அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் துப்பாக்கி வன்முறைக்கு எதிராக பேரணிகளும் நடைபெற்றன. அமெரிக்காவில் பொது இடங்களில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் அங்குள்ள மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Tags :