Advertisement

உணவு பொருட்களின் விலை மேலும் உயர்ந்ததால் மக்கள் அவதி

By: Nagaraj Sun, 25 Sept 2022 3:19:42 PM

உணவு பொருட்களின் விலை மேலும் உயர்ந்ததால் மக்கள் அவதி

இலங்கை: உணவு பொருட்கள் விலை உயர்வு... இலங்கையில் மரக்கறிகள், மீன் உட்பட பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் மேலும் அதிகரித்துள்ளன.


இந்நிலையில் கட்டுப்பாட்டு விலை இல்லாததால், வியாபாரிகள் பல்வேறு விலைகளுக்கு பாண் விற்பனை செய்வதாக மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். சில பிரதேசங்களில் பாண் ஒன்றின் விலை 220 ரூபாவாக உள்ளதாக மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

people,price,accusation,foodstuffs,fishes ,
மக்கள், விலை, குற்றச்சாட்டு, உணவுப்பொருட்கள், மீன்கள்

பேலியகொட மெனிங் சந்தையில் மரக்கறிகளின் விலைகள் நேற்று மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளன. அறுவடை குறைவினால், மெனிங் சந்தைக்கு மரக்கறியின் வருகை குறைவடைந்துள்ளதாகவும், இதன் காரணமாக மரக்கறிகளின் விலைகள் வேகமாக அதிகரித்துள்ளதாகவும் வியாபாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

பேலியகொட மத்திய மீன் சந்தையில் மீன்களின் விலைகளும் அதிகரித்துள்ளதாக வர்த்தகர்கள் குற்றம் சுமத்துகின்றனர். சந்தைக்கு மீன் பொருட்கள் கிடைப்பது தற்போது குறைந்த அளவிலேயே உள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

இதேவேளை, 5 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச நேற்று முன்தினம் அறிவித்துள்ளது. இந்த விலை குறைப்பு இம்மாதம் 30ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என கூறப்பட்ட போதிலும் சில சதொச கிளைகளில் இதுவரை பொருட்களின் விலை குறைக்கப்படவில்லை என மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

Tags :
|
|