Advertisement

ஜப்பானில் 3 நாட்களாக பெய்த கனமழையால் மக்கள் அவதி

By: Nagaraj Mon, 05 June 2023 8:38:24 PM

ஜப்பானில் 3 நாட்களாக பெய்த கனமழையால் மக்கள் அவதி

ஜப்பான்: கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு... ஜப்பானில் 3 நாட்களாக பெய்துவரும் கன மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

வெப்பமண்டல புயலான மார்வார், நாட்டின் முக்கிய தீவான ஹொன்ஷூவில் கரையை கடந்த நிலையில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதன்காரணமாக கிழக்கு மற்றும் மேற்கு பிராந்தியங்களில் சுமார் 7 ஆயிரம் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

japan,landslides,risk,meteorological center,vulnerability ,ஜப்பான், நிலச்சரிவுகள், அபாயம், வானிலை மையம், பாதிப்பு

மத்திய ஜப்பானில் சாலைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதுடன், வாகனங்களும் வெள்ள நீரில் இழுத்துச் செல்லப்பட்டன.

இதனிடையே, நாட்டின் மேற்கு பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்படும் அபாயம் இருப்பதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளியில் செல்ல முடியாமல் ஜப்பான் மக்கள் தவித்து வருகின்றனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

Tags :
|
|