Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பொகோட்டாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் சாலையில் தஞ்சமடைந்த மக்கள்

பொகோட்டாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் சாலையில் தஞ்சமடைந்த மக்கள்

By: Nagaraj Fri, 18 Aug 2023 4:48:58 PM

பொகோட்டாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் சாலையில் தஞ்சமடைந்த மக்கள்

கொலம்பியா: சக்திவாய்ந்த நிலநடுக்கம்... பொகோட்டாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதால் சாலைகளில் மக்கள் தஞ்சமடைந்தனர்.

கொலம்பிய தலைநகர் பொகோட்டாவில் 6.3 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று வியாழக்கிழமை மதியம் 12 மணியளவில் பொகோட்டாவிலிருந்து தென்கிழக்கே 40 கிலோமீட்டர் தொலைவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து, நில அதிர்வும் ஏற்பட்டது. இதனால் அங்கு கட்டிடங்கள் குலுங்கின.

apartment,woman,earthquake,powerful,earthquake ,அடுக்குமாடி குடியிருப்பு, பெண், நிலநடுக்கம், சக்தி வாய்ந்தது, நில அதிர்வு

சில கட்டிடங்கள் சேதமடைந்தன. அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர்.

அடுக்குமாடி குடியிருப்பில் வசித்த பெண் ஒருவர் அச்சத்தில் 10வது மாடியில் இருந்து வெளியே குதித்ததில், கீழே விழுந்து உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags :
|