Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கோடை சுற்றுலா செல்ல மக்கள் ஆர்வம்... விமான சேவைகள் அதிகரிப்பு

கோடை சுற்றுலா செல்ல மக்கள் ஆர்வம்... விமான சேவைகள் அதிகரிப்பு

By: Nagaraj Tue, 21 Feb 2023 9:03:59 PM

கோடை சுற்றுலா செல்ல மக்கள் ஆர்வம்... விமான சேவைகள் அதிகரிப்பு

சென்னை: கோடை சுற்றுலா செல்வதற்கு சுற்றுலாப்பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் விமான சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

கொரானா தாக்கத்தால், 2020ம் ஆண்டு கோடை சீசனில், சென்னை விமான நிலையத்தில் தொடர்ந்து 3 ஆண்டுகளாக விமான சேவை பாதிக்கப்பட்டது.கோடை சீசனில் வெளிநாடு செல்லும் சுற்றுலா பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இதனால் கோடை காலத்தில் சென்னையில் இருந்து வெளிமாநிலங்களுக்கு விமானங்களும் குறைவாக இயக்கப்பட்டன.

தற்போது கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளதால் சுமூக நிலை நிலவுகிறது. இதனால் சென்னை விமான நிலையத்தில் விமானப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 3 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு கோடை சுற்றுலா செல்ல மக்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக வெளிநாட்டு விமானங்களில் பயணிகள் டிக்கெட் முன்பதிவு அதிகரித்து வருகிறது. மார்ச் மாதத்தில் இருந்து சர்வதேச விமானங்கள் அதிகரித்துள்ளன.

day,going,tourist,year, ,கொரானா, டிக்கெட், மக்கள், விமானம், சேவை, அதிகரிப்பு

அதன்படி, ஜெர்மனியின் பிராங்பர்ட்டில் இருந்து சென்னைக்கு தற்போது வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே இயக்கப்படும் விமானம் மார்ச் முதல் வாரத்திற்கு 5 விமானங்களாக அதிகரிக்கப்படும்.

சென்னை – பாரீஸ் விமான சேவை வாரத்தில் 3 நாட்களில் இருந்து 5 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னைக்கும் அபுதாபிக்கும் இடையே வாரத்திற்கு 7 விமானங்கள் இயக்கப்படுகின்றன. இனி வாரத்திற்கு 14 விமானங்களாக அதிகரிக்கப்படும். சென்னை மற்றும் செயின்ட் டென்னிஸ் இடையே வாரத்திற்கு ஒரு விமானம் இயக்கப்படுகிறது.

இனி வாரத்தில் 2 நாட்கள் விமானங்கள் இயக்கப்படும். சென்னை-சிங்கப்பூர் பயணிகள் விமானம் கடந்த பல ஆண்டுகளாக இரவில் ஒருமுறை மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. தற்போது ஒரு நாளைக்கு 3 சேவைகளும், இரவில் 2 சேவைகளும், பகலில் ஒரு சேவையும் இயக்கப்படுகிறது.

Tags :
|
|
|