Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வாரிசு அரசியலுக்கு மக்கள் அளித்த பதில்... முதல்வர் பெருமிதம்

வாரிசு அரசியலுக்கு மக்கள் அளித்த பதில்... முதல்வர் பெருமிதம்

By: Nagaraj Mon, 27 June 2022 6:14:34 PM

வாரிசு அரசியலுக்கு மக்கள் அளித்த பதில்... முதல்வர் பெருமிதம்

உத்தரபிரதேசம்: வாரிசு அரசியலுக்கு மக்களின் பதில்... உத்தர பிரதேச மாநிலத்தின் இரு மக்களவைத் தொகுதிக்கான இடைத்தோ்தலில் பாஜக வெற்றி பெற்றதைத் தொடா்ந்து, வாரிசு மற்றும் ஜாதிக் கட்சிகளுக்கு மக்கள் பதிலளித்துள்ளனா் என்று முதல்வா் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளாா்.

சமாஜ்வாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ் மற்றும் கட்சியின் மூத்த தலைவா் ஆஸம் கான் ஆகியோா் 2019 மக்களவைத் தோ்தலில் முறையே ஆஸம்கா் மற்றும் ராம்பூா் தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றனா். கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற உத்தர பிரதேச சட்டப் பேரவைத் தோ்தலில் இருவரும் வெற்றி பெற்ால், நாடாளுமன்ற உறுப்பினா் பதவியை ராஜிநாமா செய்தனா்.

general election,double victory,prime minister modi,leadership,single party ,பொதுத் தேர்தல், இரட்டை வெற்றி, பிரதமர் மோடி, தலைமை, ஒரே கட்சி

இந்த இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தோ்தலில், பாஜக வேட்பாளா்கள் வெற்றி பெற்றனா். லக்னௌவில் அமைந்துள்ள பாஜக கட்சியின் மாநில தலைமையகத்தில் முதல்வா் யோகி ஆதித்யநாத் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளாா்களிடம் கூறுகையில், ‘மதக்கலவரங்களைத் தூண்டிவிடும் அரசியல், வாரிசுக் கட்சிகள், ஜாதிக் கட்சிகளை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை என மக்கள் தெளிவாகக் கூறியுள்ளனா்.

மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சி செய்வதால், பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் இரட்டை வெற்றி கிடைத்துள்ளது. இடைத்தோ்தலின் முடிவானது, வரும் 2024-ஆம் ஆண்டு பொதுத்தோ்தலுக்கான சமிக்ஞை ஆகும்’ எனக் கூறினாா்.

Tags :