Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சல் ... மக்களுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் முக்கிய அறிவுரை

இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சல் ... மக்களுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் முக்கிய அறிவுரை

By: vaithegi Mon, 19 Sept 2022 12:36:26 PM

இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சல்   ...  மக்களுக்கு   மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் முக்கிய அறிவுரை

சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ், குரங்கு அம்மை ஆகிய நோய் தொற்றை தொடர்ந்து தற்போது இன்புளூயன்சா காய்ச்சல் பரவி வருகிறது. எப்போதும் மழை காலங்களில் அதிகரிக்கும் குளிரின் காரணமாக சளி, இருமல் ஆகிய தொந்தரவுகள் ஏற்படும்.

மேலும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து காய்ச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படும். இந்த மழை காலங்களில் கொசுக்கள் உற்பத்தியால் டெங்கு, மலேரியா போன்ற தொற்றும் பரவும். அந்த வகையில் தற்போது தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தொடர்ந்து மழை பெய்து கொண்டு வருகிறது.

minister of public welfare,fever,advice ,மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ,காய்ச்சல்   ,அறிவுரை

எனவே அதனால் இன்புளூயன்சா காய்ச்சல் பாதிப்பு உயர்ந்து கொண்டே வருகிறது. மாநிலம் முழுவதும் சுமார் 1,044 நபர்களுக்கு இன்புளூயன்சா காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். இதில் 364 நபர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறியுள்ளார். பெரும்பாலும் குழந்தைகள் அதிகம் இன்புளூயன்சா காய்ச்சலுக்கு ஆளாகின்றனர். இது பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை அதிகப்படுத்தியுள்ளது.

இதையடுத்து இந்த இன்புளூயன்சா காய்ச்சல் அறிகுறி உள்ள குழந்தைகள் பள்ளிக்கு செல்லும் போது மற்ற மாணவர்களுக்கும் எளிதில் காய்ச்சல் ஏற்படுவதாக கூறுகின்றனர்.இதை கருத்தில் கொண்டு காய்ச்சல் அறிகுறி உள்ள குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்பாமல் வீட்டிலேயே தனிமைப்படுத்தி பார்த்துக் கொள்ளும்படி அமைச்சர் அறிவுரை வழங்கியுள்ளார்.

Tags :
|