Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பீஜிங்கில் கொரோனா காரணமாக பெப்சி கம்பெனியின் பணிகள் தற்காலிகமாக நிறுத்தம்

பீஜிங்கில் கொரோனா காரணமாக பெப்சி கம்பெனியின் பணிகள் தற்காலிகமாக நிறுத்தம்

By: Karunakaran Mon, 22 June 2020 2:04:34 PM

பீஜிங்கில் கொரோனா காரணமாக பெப்சி கம்பெனியின் பணிகள் தற்காலிகமாக நிறுத்தம்

கொரோனா வைரஸ் முதன் முதலாக சீனாவில் தான் தோன்றியது. தற்போது உலகம் முழுவதும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. அதன்பின் சீனாவில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்த நிலையில் 56 நாட்களுக்கு பிறகு மீண்டும் கொரோனா இரண்டாவது அலை அங்கு ஆரம்பித்துள்ளது. சீன தலைநகர் பீஜிங்கில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது.

இந்நிலையில் பீஜிங்கில் சுழல் பன்னாட்டு குளிர்பான கம்பெனியான ‘பெப்சி‘யின் கிளையில் பணியாற்றும் ஊழியர்கள் சிலருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால், ‘பெப்சி‘ கம்பெனியின் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. சீனாவில், முதலில் கொரோனா தோன்றிய உகான் நகரில் ஒரு கோடியே 10 லட்சம் பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது.

coronavirus,china,corona testing,pepsi company,beijing ,பீஜிங்,பெப்சி கம்பெனி,கொரோனா சோதனை,கொரோனா வைரஸ்

கடந்த மாதம் 30-ந் தேதியில் இருந்து தலைநகர் பீஜிங்கில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால், அங்கு வசிப்பவர்களுக்குகொரோனா பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ஆயிரக்கணக்கான மாதிரி சேகரிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த 11-ந் தேதியில் இருந்து 20-ந் தேதிவரை, 22 லட்சத்து 90 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

உணவு வினியோக நிறுவனங்கள், உணவகங்கள் ஆகியவற்றின் ஊழியர்களை குறிவைத்து இந்த கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதில், 227 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் ஒரு இந்திய உணவகத்தின் உரிமையாளர், தனது ஊழியர்களுக்கு தொற்று இல்லை என்று தெரிவித்துள்ளார்.

Tags :
|