Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவில் பெரம்பலூர் மாவட்டம் முதலிடம்

பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவில் பெரம்பலூர் மாவட்டம் முதலிடம்

By: vaithegi Mon, 27 June 2022 9:28:21 PM

பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவில் பெரம்பலூர் மாவட்டம் முதலிடம்


சென்னை: தமிழகத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. சென்னை, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2021-22-ம் கல்வியாண்டுக்கான 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மே மாதம் நடத்தப்பட்டது. 8 லட்சத்துக்கு மேற்பட்டோர் தேர்வை எழுதினர். இப்பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.

தேர்வர்கள் www.tnresults.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளங்களில் சென்று தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். தேர்வர்கள் மேற்கண்ட இணையதளங்களில் தங்களுடைய பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவ-மாணவிகள் பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழி படிவத்தில் குறிப்பிட்டுள்ள செல்போன் எண்ணுக்கும், தனித்தேர்வர்கள் ஆன்லைன் விண்ணப்பப்பதிவில் குறிப்பிட்ட செல்போன் எண்ணுக்கும் குறுஞ்செய்தி வாயிலாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும். காலை 10 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியானது.

general election,perambalur ,பொதுத்தேர்வு ,பெரம்பலூர்

மேலும், பிளஸ் 1 பொதுத்தேர்வில் 90.07 % சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவிகள் 94.99 % மாணவர்கள் 84.6 % தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 10.13 சதவீதம் அதிகமாக தேர்ச்சி அடைந்துள்ளனர்.

மாநில அளவில் 95.56% தேர்ச்சி பெற்று பெரம்பலூர் மாவட்டம் முதலிடம் 2வது இடம் விருதுநகர் - 95.44%: 3வது இடம் மதுரை - 95.25% தேர்ச்சி - பள்ளிக்கல்வித்துறை. பிளஸ் 1 தேர்வு எழுதிய 94.99% மாணவிகள் மற்றும் 84.86% மாணவர்கள் தேர்ச்சி மாணவர்களை விட மாணவிகள் 10.13% கூடுதலாக தேர்ச்சி பிளஸ் 1 பொதுத்தேர்வை 41,376 மாணவர்கள் எழுதவில்லை என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

Tags :